விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பால்பாண்டி கலந்து கொண்டார்.ஏழாயிரம் பண்ணை பிர்க்காவிற்கு உட்பட்ட செவல்பட்டி, குகன்பாறை, சிப்பி பாறை, துலுக்கன்குறிச்சி ,சங்கரபாண்டியபுரம் ,கங்கரக்கோட்டை, ஊத்துப்பட்டி ,இ.ராமநாதபுரம், ஏழாயிரம் பண்ணை, சேர்வைக்காரன்பட்டி, உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்களிடம் இருந்து இலவச பட்டா ,பட்டா மாறுதல், மகளிர் உரிமைத்தொகை,புதிய ரேஷன் அட்டை உள்பட பொது மக்களிடமிருந்து 48 மனுக்கள் பெறப்பட்டன.
வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் தாலுகா அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். வெம்பக்கோட்டை வருவாய் அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.








