மதுரை அலங்காநல்லூரில் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு கலையரங்கம் போல் சென்னையில் ஜல்லிக்கட்டு கலையரங்கம் அமைத்து தமிழக பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை காயம்பட்டவருக்கு மருத்துவ செலவு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தலைநகர் சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை மாநில செயற்குழுக் கூட்டம் திருப்பரங்குன்றம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் ஜி.ஆர்.கார்த்திக் ராமமூர்த்தி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், சேலம், தர்மபுரி, சென்னை, திருவள்ளுவர், விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் 25 மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்:
தலைநகர் சென்னையில் வாடிவாசல் அமைத்து தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டின் போது காயம் ஏற்படும் வீரர்களுக்கு தமிழக அரசு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் உயிரிழக்கும் வீரர்கள் குடும்பத்தாருக்கு அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும். தமிழக அரசு ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்போர்களுக்கு ரூபாய் ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில் அதனை ரூ. 2000 ஆக வழங்க வேண்டும்.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை நடத்திட ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்குவதை தவிர்த்து விழா கமிட்டியினர் அனைத்து அதிகாரமும் வழங்க வேண்டும்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவினை மற்ற பகுதிகளை போல தமிழக அரசு கிராம கமிட்டினரையும் இணைத்து விழா நடத்த வேண்டும்.
என்பது உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இன்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் ராமமூர்த்தி கூறுகையில்
ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழக்கும் மறுபடி வீரர்களின் குடும்பத்தில் கல்வித் தகுதிக்கேற்றவாறு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் காயம்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி வழங்க வேண்டும்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை இனி மாவட்ட நிர்வாகம் மற்றும் கிராமத்தினர் இணைந்து நடத்தவேண்டும்.
ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்குவதில் குறை கேடு நடப்பதால் விழா கமிட்டி நிறைய டோக்கன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்தலைநகர் சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மதுரை அலங்காநல்லூரில் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் வரவேற்பை பெற்றுள்ளது அதேபோன்று சென்னையிலும் மைதானம் வைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் இதில் எந்த ஊரில் இருந்து வந்து விழா நடத்த தமிழக அரசு ஒத்துழைப்பு தரும் என நம்புகிறோம் என ராமமூர்த்தி கூறினார்
