• Sun. Dec 28th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோவையில் 27 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள்..,

BySeenu

Apr 24, 2025

தமிழகம் முழுவதும் இருந்து 800 க்கும் மேற்பட்ட ஜல்லிகட்டு காளைகள் கலந்து கொள்ள உள்ளது.

யாரும் அடக்க முடியாத காளை உரிமையாளருக்கு முதல்வர் அவர்கள் சார்பில் சொகுசு காரும், மாபெரும் சிறந்த வீரருக்கு ஒரு சொகுசு காரும் துணை முதல்வர் வழங்க உள்ளார்.

கோவை செட்டிபாளையம், கொச்சின் புறவழிச்சாலையில், தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் இணைந்து வரும் 27 ந்தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழாவை நடத்த உள்ளது. தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களின் தலைமையில், தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை தலைவரும், திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான தளபதி முருகேசன் முன்னிலையில் நடைபெற உள்ள இந்த மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழாவை மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைக்க உள்ளார். அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், தமிழர் பண்பாடான இந்த ஜல்லிக்கட்டை பறைசாற்றும் வகையில், ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தின் முகப்பில், ஜல்லிக்கட்டுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான காளையை, இளம் காளை ஒருவர் அடக்குவது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் செல்பி எடுத்து மகிழலாம். இந்த செல்பை பாயிண்டை கோவை தெற்கு மாவட்ட செயலளரும், பேரவையின் தலைவருமான தளபதி முருகேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில், மேயர் ரங்கநாயகி, துணைமேயர் வெற்றிச்செல்வன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளர் மகேந்திரன் மற்றும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.