• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

“ஜெய் விஜயம்” திரைவிமர்சனம்

Byஜெ.துரை

Jan 28, 2024

ஜெய் ஆகாஷ் தயாரிப்பில் ஜெயசதீஷன் நாகேஸ்வரன் இயக்கி வெளி வந்த திரைப்படம்”ஜெய் விஜயம்”

இத்திரைப்படத்தில் ஜெய் ஆகாஷ்,அக்‌ஷயா,கண்டமுதன், ஏ.சி.பி.ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், திவாஹர், டாக்டர் சரவணன், பாஸ்கர் உட்பட மற்றும் பல புது முகங்கள் நடித்துள்ளனர்.

கதாநாயகன் (ஜெய் ஆகாஷ்) கார் விபத்து நடக்கிறது அந்த விபத்தில் அவருக்கு தலையில் மிகப்பெரிய காயம் ஏற்படுகிறது. இந்த விபத்தால் 2012 – ஆம் வருடத்திற்கு பிறகு 10 ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை மறந்துவிடுகிறார்.

மறந்துபோன ஆண்டில் ஜெய் ஆகாஷ் இரட்டை கொலை செய்திருக்கிறார் என்று போலீசார் அவரை பிடிக்கிறார்கள். ஆனால், ஜெய் ஆகாஷ் அதை மறுக்கிறார் மறந்துபோன ஆண்டுகளின் நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவர போலீசார் பல வழிகளில் முயற்சிக்கிறார்கள்.

அவர் சுயநினைவுக்கு வந்தாரா? கொலை செய்தாரா? என்பதுதான் படத்தின் கதை.

திரைக்கதையை கவனம் செலுத்தி இருக்க வேண்டும். ஒரு வீடு ஒரு மொட்டை மாடி ஒரு பத்து பேரை மட்டும் வைத்து படத்தை எடுத்துள்ளார் இயக்குனர்.

படம் முழுவதும் ஒரே புகைமூட்டமாகவே இருக்கிறது அதை தான் கொடைக்கானல் வீட்டில் இருக்கிறது போல் இவர்கள் ஒரு வீட்டை கொடைக்கானல் போல் காண்பிக்கிறார்கள்.

ஜெய் ஆகாஷ் இத்தனை வருடங்கள் சினிமாவில் இருந்தும் இன்னும் நடிக்க கற்றுக் கொள்ளவில்லை. சண்டை காட்சிகள் சுமார் தான் ஜெய் ஆகாஷ் இவ்வளவு வருடம் சினிமாவில் இருந்தும் ஒரு சண்டை காட்சிகள் கூட சரியான முறையில் காட்சி படுத்தவில்லை

அக்‌ஷயா கதாபாத்திரம் சுமார் தான் இருவருக்கிடையே இருக்கும் காட்சிகள் ஒன்றும் கைகூடவில்லை ரசிக்கும்படியாகவும் இல்லை. பாடல்கள் பெரிதாக இல்லை . ரசிக்கும்படியாக காட்சிகளும் இல்லை. இசை மற்றும் பின்னணி இசை ஒன்றுமே சரியில்லை.

திரைப்படம் பார்ப்போர்க்கு மிகப்பெரிய மனது வேண்டும். மொத்தத்தில்”ஜெய் விஜயம்”டைம் இஸ் கோல்ட் வீணடிக்க வேண்டாம்.