• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் வாழ்க்கையில் நடிக்கும் ஜெய் ஆகாஷ்

ரீ அம்மன் மீடியாஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் அமைச்சர். கதாநாயனாக ஜெய் ஆகாஷ் மற்றும் கதாநாயகியாக தேவிகா நடிக்கின்றனர் . சர்வதேச விளையாட்டு வீரர் சவுந்தரராஜன், காவல் துறை முன்னாள் அதிகாரி ராஜன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான அருணாச்சலம், புஷ்பவதி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை ஸ்ரீஅம்மன் கலை அறிவியில் கல்லூரி விஷூவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள். தேவா இசை அமைத்துள்ளார். எல்.முத்துகுமாரசாமி இயக்கி உள்ளார்.படம் பற்றி அவர் கூறியதாவது: தமிழ் சினிமாவில் அரசியல்வாதிகள் பற்றி விதவிதமான படங்கள் வந்திருக்கிறது. இது ஒரு அமைச்சரின் தூய்மையான காதல் கதையாக உருவாகி இருக்கிறது.

இது நிஜகதை அல்ல. ஆனால் சில நிஜ சம்பவங்களுடன் ஒப்பிட்டு பார்க்க கூடியதாக இருக்கும். குற்றாலம் , திருத்தணி , சென்னை அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு ‘ஹி’சான்றிதழ் வழங்கியுள்ளது. ஏப்ரல் 29 அன்று தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது. என்றார்.