• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ஜெ.பிறந்த தினம், அன்னதானம்..,

ByN.Ravi

Feb 24, 2024

திருப்பரங்குன்றம் அருகே, திருநகர் சித்தி விநாயகர் கோவிலில் அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அன்னதானம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, திருநகரில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் அதிமுக ஓ.பி.எஸ். அணி சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ராஜ்மோகன் தலைமை வைத்தார்.உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், சித்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற அன்னதான விழாவில் பங்கேற்று அன்னதானம் வழங்கினார்.
அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற விழாவில் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான விழாவில 40 பெண்கள் உற்பட 200 பேர் கலந்து கொண்டனர்.