பல்லாவரம் வாரச்சந்தையில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
சென்னை பல்லாவரம் பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை பிரபலமாக விற்பனை நடைபெறும் இதில் சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள விற்பனையாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய காலை முதல் கடைகளை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதில் சுற்று வட்டாரத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம் காய்கறி முதல் இரும்பு பொருட்கள் கம்ப்யூட்டர் செல்ல பிராணிகள் என அனைத்தும் பரபரப்பாக விற்பனை நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் சுகாதாரம் மற்றும் முறையில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வந்தன .

அதன் அடிப்படையில் பல்லாவரம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பிரபாகரன் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் உட்பட பத்துக்கு மேற்பட்டோர் திடீராய்வில் ஈடுபட்டனர் அப்பொழுது விற்பனை செய்து கொண்டிருந்த கலர் அதிகமாக சேர்க்கப்பட்ட தின்பண்டங்கள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவு பொருள்கள் காலாவதியான பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விற்பனை செய்த நபர்களை கடுமையாக எச்சரித்தனர்.