• Tue. Dec 10th, 2024

விழுந்து நொறுங்கியது இந்திய விமானம் அல்ல..!

Byவிஷா

Jan 21, 2024

ஆப்கானிஸ்தானில் விழுந்து நொறுங்கியது இந்திய விமானம் அல்ல என ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து ரஷ்யா நாட்டின் தலைநகர் மாஸ்கோவிற்கு பயணிகளுடன் இந்திய விமானம் சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது, ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பதக்ஷான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியது. பதக்ஷான் மாகாணத்தின் சிபக் மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது என ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.