• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றது வெட்கக்கேடானது – இயற்கை வள துறை அமைச்சர் ரகுபதி

ByS. SRIDHAR

Jun 23, 2025

ரகுபதி இயற்கை வளங்கள் துறை அமைச்சர் இந்தியாவில் இந்துக்கள் தான் அதிகம். ஆகவே இங்கு சிறுபான்மையினர் மக்களுக்கான பாதுகாப்பு தான் தேவை. ராமா ராமா என்று கோஷம் போட்டவர்கள் இன்று அவர்களையும் முருகா, முருகா என்று கோஷம் போட வைத்துள்ளது திராவிட மாநாடு அரசின் சாதனை. இந்து சமய அறநிலையத்துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்கள் இருந்திருக்காது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றது வெட்கக்கேடானது அதிமுக என்று பெயர் வைத்துக் கொள்வதற்கு இவர்கள் தகுதியற்றவர்கள் திராவிடத்திற்கு எதிராக தான் இந்த மாநாட்டை அவர்கள் நடத்தியுள்ளனர்.

உச்சநீதிமன்றம் தற்போது மணல் குவாரிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற்ற பிறகு தமிழகத்தில் சட்டப்படி மணல் குவாரிகள் திறக்கப்படும்.

புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி…

புதுக்கோட்டை திருக்கோகரணத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில், விவசாயிகள் தங்களது வேளாண் கருவிகளை பழுது நீக்கும் பராமரிப்பு தொடர்பான முகாம் நடைபெற்றது. முகாமில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி மாவட்ட ஆட்சியர் அருணா உள்ளிட்டோம் தொடங்கி வைத்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி..,

இங்கு உள்ள எல்லோரும் இந்துக்கள் தான். இந்தியாவில் இந்து ககள் தான் அதிகம். ஆனால் இங்கு தேவை சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பு தான், எந்த இந்துக்களை இங்கு வாழவிடவில்லை, என்று பவன் கல்யாண் சொல்ல வேண்டும்.

ஆந்திராவில் வேண்டுமானால் அது போல் பிரச்சனை, தமிழகத்தில் அது போன்ற பிரச்சனைகள் இல்லை. ராமா, ராமா என்று கோஷம் போட்டவர்களை இன்று
முருகா என்று கோஷம் போட வைத்துள்ளது திராவிட மாடன் அரசின் சாதனை.

இந்து சமய அறநிலை துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களை இறந்திருக்காது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றது வெட்க்க கேட்டானது.

அதிமுக என்ற பெயர் வைத்து கொள்வதற்கே தகுதியற்றவர்கள், திராவிடத்திற்கு எதிராகத்தான் இந்த மாநாட்டை அவர்கள் நடத்தி உள்ளனர்.

உச்சநீதிமன்றம் மணல் குவாரிகளை திறக்க அனுமதி கொடுத்துள்ளது,சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்று விரையில் சட்டப்படி மணல் குவாரிகள் திறக்கப்படும்.

தமிழ்நாட்டில் ட்ரிபிள் இஞ்சின் சர்க்கார் எல்லாம் அமையாது ஒரே இஞ்சின் சர்க்கார் தான்… தமிழிசை ட்ரிபிள் என்ஜின் சர்க்கார் அமையும் என்று கூறியதற்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்தார்.

இங்கு சிறுபான்மை மக்களுக்கு தான் பாதுகாப்பு வேண்டும் பெரும்பான்மை மக்களிடம் இருந்து, அதுதான் அரசியல் கடமை,அந்தக் கடமையை செய்கின்ற அரசு திமுக அரசு. அந்த கடமையிலிருந்து தவறுகின்ற அரசு மத்திய அரசு.

எந்த இந்துக்களை இங்கு வாழ விடவில்லை என்று அவர் சொல்லட்டும் பவன் கல்யாண் உள்ள ஆந்திராவில் வேண்டுமானால், அது போன்ற சம்பவம் நடந்திருக்கலாம் அதற்கு நாங்கள் பொறுப்பள்ள.

பவன் கல்யாண் ஆந்திராவை போய் பார்க்கட்டும். தமிழ்நாட்டில் பவன் கல்யாண் தனது சொத்து வேலையெல்லாம் காண்பிக்க முடியாது. அதற்கு தகுந்த இடம் இது அல்ல.

அங்கு வெங்கடாஜலபதியை சொல்வார்கள். இங்கு வந்து புதுசாக முருகன் கோசம் போட்டு உள்ளார். பவன் கல்யாணி போல் இரட்டை வேடம் போடுபவர்கள் நாங்கள் அல்ல.

அண்ணாமலைக்கு தெரிந்த வசனங்களை பேசி உள்ளார். சாட்டை அடி சவுக்காடி. இது எல்லாம் அண்ணாமலைக்கு தெரிந்த வசனம். வசனங்களைத்தான் அண்ணாமலை அந்த மாநாட்டில் உச்சரித்துள்ளாரே தவிர, தமிழக மக்களின் மனநிலையை அவர் உச்சரிக்கவில்லை.

இதுவரை ராமா ராமா என்று கோஷம் போட்டவர்களை, முருகா முருகா என்று கோஷம் போட வைத்துள்ளது திராவிட மாடல் அரசு. நாங்கள் ஆன்மீகத்திற்கு எதிரானவர்களாக இருப்போமேயானால் இவர்கள் இன்று முருகவேசம் போட்டிருக்க முடியாது.

ஆன்மீகம் இங்கு தலைத்திருக்கிறது என்ற காரணத்தினால் தான் தமிழ் கடவுள் முருகனை தமிழர்களின் இதயத்தில் ஏந்தி உள்ளார்கள் என்ற காரணத்தினால் தான் தமிழர்களுக்கு யார் வேஷம் போடுகிறார்கள். யார் உண்மையானவர்கள் என்பது தமிழக வாக்காளர்களுக்கு நன்றாக தெரியும். இந்த வேடதாரிகளை அவர்கள் நம்ப மாட்டார்கள்.

அயோத்தியில் என்ன ஆச்சு, அங்கு இந்தியா கூட்டணியில் தான் வெற்றி பெற்றது உத்திரபிரதேசம் என்ன ஆச்சு. ராமர் பிறந்த மண்ணிலே வென்றது. இந்தியா கூட்டணி பாஜக அல்ல.

2026 தேர்தலுக்கும் நேற்று நடந்த கூட்டத்திற்கும் சம்பந்தமில்லை. தமிழ்நாட்டு வாக்காளர்கள் இந்துக்களாக இருந்தாலும், இஸ்லாமியர்களாக இருந்தாலும், கிருத்தவர்களாக இருந்தாலும், பௌத்தர்களாக இருந்தாலும் தங்கள் மனசாட்சி அவர்களுக்கு நன்றாக தெரியும்.

யார் தமிழ்நாட்டை ஆண்டால் பாதுகாப்பு, யார் தமிழ்நாட்டை ஆண்டாள் அமைதியாக இருக்கும். யாரிடத்தில் அதிகாரம் இருந்தால் நன்றாக இருக்கும், உணர்ந்து தமிழகத்தின் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இவர்களின் போலி வேடம் எடுபடாது.

*தமிழ் கடவுள் முருகனை பாஜக இந்து முன்னணியினர் ஐகான் செய்து எங்கு கொண்டு போவார்கள். தமிழ்நாட்டை விட்டு முருகனை எங்கும் கொண்டு செல்ல முடியாது. வேறு மாநிலங்களில் முருகன் கோஷம் போட முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கோஷம் இருக்கிறது. கேரளாவில் ஐயப்பனுக்கும், ஆந்திராவில் வெங்கடசலபதிக்கும், மைசூரில் சாமுண்டீஸ்வரிக்கும் தான் கோஷம் போட முடியும். அதனால் முருகனை தமிழ்நாட்டை விட்டு கடத்திச் செல்ல முடியாது. அவர் நம்மிடம் தான் இருப்பார். நம்மோடு தான் இருப்பார்.

2026 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எதுவும் பிரிந்து போகாது. கூடுதல் தொகுதி கொடுப்பது என்பது பேச்சுவார்த்தையின் போது முதல்வர் முடிவெடுப்பார்.

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை இதனால் நாங்கள் மக்களை சந்திக்க முடியவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் கூடுதல் இடங்கள் வேண்டும் என்று அதே நேரத்தில் அவர் கூறியுள்ளார். எனவே அந்த கேள்வி இதிலிருந்து அடிபட்டுவிட்டது என்று நேரடியாக பதில் சொல்லாமல் நழுவி பதிலளித்தார்.

வடமாநிலங்களில் சென்று நடைமுறைப்படுத்தி காட்டட்டும் இங்கு நாங்கள் எந்தவித மத கலாச்சாரத்திற்கும் இடம் கொடுக்க மாட்டோம். அனைத்து மாணவர்களும் ஒன்றுதான். அவர்கள் அண்ணன், தம்பிகளாக தான் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இருக்கிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் கலாட்டாவை உருவாக்கி அங்கு பயங்கரவாதத்தை உருவாக்கி சண்டை, சச்சரவை உருவாக்கி சந்தடி சாக்கில் நுழைந்தார்கள். அப்படி பாஜகவினர் தமிழ்நாட்டில் நுழைவதற்கு திராவிட மாடல் அரசு எந்த காலத்திலும் அனுமதிக்காது. அடித்து விரட்டப்படுவார்கள்.

எந்த குவாரி உரிமையாளர்களையும் கட்டாயப்படுத்தி வசூல் செய்யவில்லை. அப்படி புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கின்றோம். மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தான் நிலவரி எல்லாம் போடப்பட்டுள்ளதை தவிர, வேறு எந்த கட்டணமும் கூடுதலாக யாரிடமும் வசூலிக்கவில்லை. ஆதாரம் இருந்தால் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்.