தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனாலை குடித்ததாலே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.எந்தத் தொழிற்சாலையிலிருந்த மெத்தனால் என்ற விஷச்சாராயம் வந்தது, அதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்று புலன் விசாரணை நடந்து வருகிறது.மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் ஆகும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார். கள்ளச்சாராயம் காய்ச்சுவது தடுக்கப்பட்டதால் தொழிற்சாலையில் இருந்து மெத்தனாலை திருடி விற்கப்பட்டதாக தமிழக டிஜிபி விளக்கம்.