• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

3 வருடமாக மனுக்கள் நிலுவையில் இருப்பதாக குற்றச்சாட்டு..,

ByPrabhu Sekar

Nov 28, 2025

குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒருநாளும் வட்டாட்சியரை நேரில் சந்திக்க முடியவில்லை என பொதுமக்கள் கடும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக தாங்கள் அளித்த மனுக்கள் எந்த நிலையிலும் தீர்வு பெறாமல் நிலுவையில் இருப்பதாகவும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் பலமுறை புகார் செய்தும் இதுவரை பதில் கிடைக்காதது மக்கள் நலனைக் கவனிக்க வேண்டிய அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுவதாக தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் “மக்களுக்கான முதல்வர்” என கூறப்படும் நிலையில், சில அரசு ஊழியர்கள் பொதுமக்களின் பிரச்னைகளைக் கண்டு கொள்ளாதது வருத்தம் தருவதாகவும், அவர்கள் கூறினர்.

சிறிது சிறிதாக சேமித்து வாங்கிய தங்கள் நிலத்தை அரசு தன்னிச்சையாக அபகரிக்க முயற்சி செய்வதாகவும், இதனால் பல குடும்பங்கள் அச்சத்திலும் அவதியிலும் உள்ளன என்றும் குறிப்பிட்டனர்.