தேனி மாவட்டம், போடி தாலுகா, பொட்டிபுரம் ஊராட்சிக்குட்பட்ட, திமிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்த மரங்களை தனி நபர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி வெட்டி கடத்தி விற்பனை செய்து விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

திம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள மசூதிக்கு பின்புறம் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஏராளமான மரங்கள் இருந்தது. இதை மரங்களை தனிநபர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி வெட்டி விற்பனை செய்து விட்டார்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய ஊராட்சி மன்ற நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டி விற்பனை செய்த தனி நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
