• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ரயில் மோதியதில் இளைஞர் 12 கிலோமீட்டர் இழுத்துச் சென்று உயிரிழந்த பரிதாபம்

ByKalamegam Viswanathan

Feb 16, 2024

திருமங்கலம் அருகே தாம்பரம் – நாகர்கோவில் ரயிலில், ரயிலின் முன் பகுதியில் சிக்கிய இளைஞரை ரயில் இழுத்துச் சென்றதில் இளைஞர் உயிரிழப்பு – கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் ரயில் 30 நிமிடம் நிறுத்தி, உடல் மீட்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயிலின் முன்புறத்தில், திருமங்கலம் கற்பக நகரை சேர்ந்த உடல் நலம் பாதித்த திருமணமான இளைஞர் முருகன் (39) தண்டவாளத்தில் நின்ற போது, அதி வேகத்தில் வந்த ரயிலின் முன்பகுதியில் உடல் சிக்கிக்கொண்டதில், 12 கி.மீ வரை இழுத்துக் கொண்டு சென்றது. இதில் இளைஞர் உடல் இழுத்துச் சென்றதில், கால் பகுதி முழுவதும் துண்டிக்கப்பட்டும், வயிற்றுப் பகுதியில் ரத்த காயங்களுடன், ரயில் கள்ளிக்குடி ரயில் நிலையத்தை அடைந்தது.

பலியான இளைஞரின் உடலை விருதுநகர் போலீசார் முன்னிலையில் மீட்கப்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
( இளைஞர் முருகனுக்கு உடலில் கல்லீரல் பாதிப்பும், மனைவி, குழந்தையும் உண்டு).