• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கோவை இளம் தொழிலதிபர்கள் ஈஷா வருகை

ByKalamegam Viswanathan

May 21, 2023

கோவையை சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் வகையில் ஈஷா சார்பில் உப யோகா மற்றும் ஈஷா கிரியா வகுப்புகள் நடத்தப்பட்டன.

தொழில் உலகில் சக்தி வாய்ந்த பின்புலம் உடைய BNI அமைப்பின் கோவை ரிதம் சேப்டர்-ஐ சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட இளம் தொழிலதிபர்கள் ஈஷா யோகா மையம் வந்து யோக பயிற்சிகளை கற்றுக்கொண்டனர். ஈஷா சார்பில் இரண்டு நாள் பயிற்சியாக உப யோகா, ஈஷா க்ரியா உள்ளிட்ட சக்திவாய்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும் ஆதியோகி திவ்யதரிசனம், தியானலிங்கத்தில் நாத ஆராதனை, லிங்கபைரவியில் அபிஷேகம், நாட்டு மாடுகளை பராமரிக்கும் மாட்டுமனை, உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

BNI என்பது உலகளவில் 75 நாடுகளில் 300,000 உறுப்பினர்களை உடைய உலகின் முன்னணி வணிக பரிந்துரை அமைப்பு. BNI உறுப்பினர்கள் பிராந்திய, தேசிய மற்றும் உலகளாவிய BNI ஊழியர்களால் தீவிரமாக ஆதரிக்கப்படுகிறார்கள். தங்கள் வணிகங்களை வளர்ப்பதற்கும், தங்களுடைய இலக்குகளையும் தாண்டி சாதிப்பதற்கும் தேவையான பயிற்சி, கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குகிறார்கள்.

இங்கு கற்றுக்கொண்ட பயிற்சிகள் மூலம் உடல் மன நலம், திறன்மிக்க தொழிலதிபராக தேவையான தெளிவு, கூர்மை உள்ளிட்ட பலன்கள் கிடைக்கப் பெற்றதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். ஐங்கரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் அங்கு அய்யப்பன் தனது அனுபவம் குறித்து பகிர்கையில், “எனக்கு எப்போதும் மன அழுத்தம், டென்ஷன் இருக்கும். இங்கு வந்து இன்று காலை யோகப்பயிற்சிகள் செய்த போது நிறைய மாற்றம் தெரிகிறது. தொடர்ந்து ஷாம்பவி தியானம் உள்ளிட்ட பயிற்சிகளை செய்துவந்தால் குடும்ப வாழ்க்கை, தொழில் என எல்லாவற்றிலும் திறம்பட இயங்க முடியும்” என்று புத்துணர்வோடு பகிர்ந்துகொண்டார். பேபி வேர்ல்ட் உரிமையாளர் அமர் “இது மிகவும் வித்தியாசமான அனுபவம். இந்த பயிற்சிகளை தொடர்ந்தால், தொழில் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். இங்கு பரிமாறப்பட்ட உணவுகளும் வித்தியாசமாகவும், சத்தானதாகவும் இருந்தது” என்று தனது அனுபவத்தை பகிர்ந்தார்.

சத்குரு அவர்கள், அனைவரும் பின்பற்றும் வகையிலான எளிய யோகப்பயிற்சிகள் வழங்குவது மட்டுமல்லாமல், தொழிலதிபர்களும் திறன் மிகுந்தவர்களாக வளர அவர் வழங்கும் ‘ஈஷா இன்சைட்’ போன்ற தனிமனித மேம்பாட்டு நிகழ்ச்சிகளும் உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. ஒரு வெற்றிகரமான தொழில் புரியத் தேவையான தகுதி குறித்து அவர் சொல்கையில், “எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து சிந்திப்பதை விடுத்து, நீங்கள் எதை உருவாக்க விரும்புகிறீர்கள் என்று பார்ப்பதாலும், நீங்கள் உருவாக்குவது உண்மையிலேயே பயனுள்ளது என்றால், பொருளாதார வளர்ச்சி என்பது அதுவாகவே நடக்கும்” என்கிறார்.