இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 2”.
முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கு அதிக வரவேற்புகள் கிடைத்துள்ளது என்றே கூறவேண்டும்.
பலத்த எதிர் பரப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் 400 திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கிறது.