• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வாலிபர் சடலம் கொலையா ?, தற்கொலையா ?

BySeenu

Sep 11, 2025

கோவை, போத்தனூர் செட்டிபாளையம் செல்லும் சாலையில், ஈஸ்வரன் நகர் பகுதியில் உள்ள முட்புதரில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்து உள்ளது. இதனை அப்பகுதிக்கு சென்றவர்கள் பார்த்தனர்.

இது குறித்து சுந்தராபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்று பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து நடத்திய முதல் கட்ட விசாரணையில் கோவை கோண வாய்க்கால் பாளையம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய வெங்கடேசன் என்பது தெரியவந்தது. மது போதைக்கு அடிமையான வெங்கடேசன் கடந்த சில நாட்களாக முதுகு வலி இருந்ததாக வீட்டில் கூறி வந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து கடந்த இரண்டு தினங்களாக அவரை காணவில்லை என அவர் வீட்டில் இருந்தவர்கள் தேடி வந்து உள்ளனர்.

இந்நிலையில் உடல் முட்புதரில் இருந்து காவல் துறையினர் கைப்பற்றி உள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர் கொலை செய்யப்பட்டாரா ? தற்கொலை செய்தாரா ? அல்லது உடல்நிலை கோளாறு காரணமாக உயிரிழந்தாரா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

முட்புதரில் 24 வயதுடைய உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.