• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

டாக்டர் உறங்குகிறாரா..? அரசு திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவமனை அவலம்..!

ByKalamegam Viswanathan

Dec 6, 2023

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியின் மாணவிகள் சிகிச்சை சிகிச்சை அளித்து வருவதாகவும், மருத்துவர் தனி அறையில் உறங்கிக் கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனை , புறநகர் பகுதிகளில் மிகப்பெரிய மருத்துவமனையாக கருதப்படும் நிலையில், இங்கு வெளி நோயாளிகள் பிரிவில் பணியில் இருக்கும் பணி மருத்துவர் பணியில் ஈடுபடாமல் , அங்குள்ள தனி அறையில் ஓய்வெடுத்துக் கொள்வதாக நோயாளிகள் புகார் தெரிவிப்பதுடன், அங்கு சிகிச்சை அளிப்பதற்கு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவிகள் பயன்படுத்தப்படுவதால் நோயாளிகள் பெரும் அச்சத்தில் வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மருத்துவ அதிகாரி உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பணியில் இருக்கும் மருத்துவரை பணியில் ஈடுபடச் செய்யவும், மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் நோயாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.