தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சுயாட்சி என அனைத்து கட்சி கூட்டம் நடத்த தயாரா? பொன்னார் கேள்வி எழுப்பினார்.
நாகர்கோவிலில் பாஜக அலுவலகத்தில் பொன். இராதாகிருஷ்ணன் பத்திராகையாளர்கள் சந்திப்பின் போது, தமிழக முதல்வர் வெற்றிகரமாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி விட்டாரே என செய்தியாளர்களின் கேள்விக்கு..,
பொன்னார் தெரிவித்த பதில்.
திருமணம் நடத்துபவர்கள் எல்லோருக்கும் ஒரே மனோநிலையில் அழைப்பை கொடுப்பதில்லை. சிலரை விரும்பி அழைப்பாளர்கள், சிலரை சண்டாளன் இவன் வந்துவிடக்கூடது என்ற எண்ண ஓட்டத்தில் அழைப்பாளர்கள். இதுபோன்று தான் முதல்வர் நடத்திய அனைத்துகட்சி கூட்டத்தில் போனவர்களின் மன நிலை எத்தகையது என கணிக்க முடியாது.
கலைஞர் கருணாநிதி அவர் அரசியலில் நீண்டகாலம் ஸ்டாலினுக்கு பயிற்சி கொடுத்தார். நம்முடைய துணை முதல்வரின் படம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைத்திருக்கிறார்கள். நியாய விலை கடைகளில் முதல்வர் படத்துடன், துணை முதல்வரின் படமும் வைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திற்கு இலவசமாக அரிசு வழங்குவது மத்திய அரசு பிரதமர் மோடி-யின் படத்தைத் தான் நியாய விலை கடைகளில் வைக்கவேண்டும்.

மத்திய கல்வி அமைச்சர் கல்விக்கான நிதியை ஏற்கனவே தந்து விட்டார். ஒவ்வொரு துறைக்கென்று ஒதுக்கிய நிதியை தமிழக அரசு வேறு திட்டங்களுக்கு ஒதுக்கினால் அதெற்கெல்லம் நிதி ஒதுக்க முடியாது என தெரிவித்த பொன்னார். தமிழக முதல்வர் மாநில சுயாட்சிக்கொன்று அனைத்து கட்சி கூட்டம் நடத்துவரா என கேள்வி எழுப்பினார்.
