• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கதாநாயகி ஆகிறாரா சாரா டெண்டுல்கர்?

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர். இதில் மருத்துவ படிப்பை முடித்திருக்கும் சாராவுக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதாக கூறப்படுகிறது.

அவரது சமூகவலைத்தளப் பக்கத்தில் சுயவிவரத்தில் ஸ்டைல் குறிப்புகள், படங்கள், பயண குறிப்புகள் ஆகியவை நிரம்பி வழிகிறது. கடந்த 2021 ல் மாடலிங் துறையில் சாரா அறிமுகமானபோது, பாலிவுட் திரை உலகிலும் காலடி எடுத்து வைப்பார் என்ற பேச்சுகள் எழுந்தது.

இந்த நிலையில் சாரா கூடிய விரைவில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகலாம் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. நடிப்பில் மிகவும் ஆர்வமாக உள்ள அவர், சில பிராண்ட்களில் ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும், நடிப்பு வகுப்புகளுக்கு சென்று வருவதாகவும் பிரபல பாலிவுட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. பெரும்பாலும் தன்னைப்பற்றி வெளியில் எதையும் கூறாத சாரா, தன் நடிப்பு திறமையால் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தக்கூடும்.

அவர் திறமைமிக்கவர், அவருடைய பெற்றோர் சாரா எடுக்கும் முடிவை ஆதரிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதனிடையில் சாரா டெண்டுல்கர் ஷாஹித் கபூருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. ஆனால் சச்சின் டெண்டுல்கர், தன் மகள் திரைப்படத்தில் நடிப்பது தொடர்பாக வரும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை என கூறியுள்ளதாக தெரிகிறது.