• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

“சப்தம்”படத்தில் லக்‌ஷ்மி மேனன் நாயகியா? ஆண்டியா?

Byதன பாலன்

Feb 25, 2023

தமிழ் சினிமாவில்அனைவரும் திரும்பி பார்க்கும் வெற்றியை ஈரம் படம் மூலம் அடையாளப்படுத்திய இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி இணையும் சப்தம் படத்தில் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்துள்ளார் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வாக அறிவித்துள்ளது

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடித்து வரும் திரைப்படம் “சப்தம்”.
“ஈரம்” படம் மூலம் திரையுலகை திரும்பிப்பார்க்க வைத்த இந்த வெற்றிக்கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை, திட்டமிட்டபடி படக்குழுவினர் முடித்துள்ளனர். விரைவில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதில் ஆதி லக்‌ஷ்மி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன என கூறப்படுகிறது.நடிகை லக்‌ஷ்மி மேனன் இப்படத்தில் இணைந்தது குறித்த அறிவிப்பை ஒரு போஸ்டராக தயாரிப்பு குழுவினர் வெளியிட்டுள்ளனர்.திரில்லர் படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குநர் அறிவழகன். இப்படத்தில் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார். ஈரம் படத்தில் இந்த வெற்றிக்கூட்டணிக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.