தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர்-யின் நூற்றாண்டு விழா நடைபெற்ற போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மேடையில் நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தும் மாற்றத்திற்கு ஆன அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழக சட்டமன்றத்திற்கு 2021_ ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவின் ஆட்சி அகற்றப்பட்டு, மு.க.ஸ்டாலின் தலைமை ஆட்சி அமைத்தது. சட்டமன்ற தேர்தலுக்கு பின் நடந்த நாகர்கோவில் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் பெரும்பான்மை பெற்ற நிலையில், மகேஷ் மேயர் பதவியை நாகர்கோவில் முதல் நகராட்சி மேயராக மகேஷ் தேர்வு செய்யப்பட்டார்.

நாகர்கோவிலில் மாநகராட்சி நிர்வாக வசதிக்காக நாகர்கோவிலில் மாநகர பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகளுக்கு வரி உயர்வை ஏற்படுத்திய அளவிற்கான எந்த வசதியும் உயர வில்லை என தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், மாநில அமைப்பாளர் டேவிட்சன் தலைமையில் மாவட்ட தலைவர் பால்ராஜ், துணைத்தலைவர் கதிரேசன் ஆகியோர் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் கொடுத்த மனுவில் வைத்துள்ள கோரிக்கை.
நாகர்கோவிலில் மாநகராட்சி தரம் உயர்த்தியதின் மூலம் மக்களின் வாழ்க்கை தரமோ, குறிப்பாக வியாபாரிகளின் வர்த்தகமோ எந்த வளர்ச்சியும் அடையவில்லை.
பொதுமக்கள் கடைகளுக்கு சென்று அவர்களின் தேவைப்படும் பொருட்கள் வாங்குவது என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. வீட்டில் இருந்தே ஆன்லைன் வர்த்தகத்தின் மூலமாகவே பொருட்களை வாங்குவதாலும், ஜிஎஸ்டி தாக்கத்தால் வேலை வாய்ப்பு அற்றவர்களின் கடைசி புகலிடமாக சில்லறை வணிகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது.

இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி வீடு மற்றும் கடைகளுக்கான வரியை பலமடங்கு உயர்த்தி நோட்டீஸ் வழங்கியுள்ளது. வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் பொருளாதார சூழ்நிலையை உணர்ந்து மாநகராட்சி நிர்வாகம் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்கள்.