தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது
அப்போது விஜய் தான் தமிழக வெற்றி கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளர் எனவும் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரம் தலைவர் விஜய்க்கு இருப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதனால் அதிமுகவுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி இல்லை என்பது வெளிப்பட்டது.

இதையடுத்து தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் சேர போகின்றது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் மற்றும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா கட்சி கூட்டணி அமைப்பது போன்று மதுரை முழுவதிலும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோர் இணைந்து இருப்பது போன்ற சுவரொட்டிகள் அண்ணாநகர், வரிச்சியூர், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பாஜகவின் கூட்டணியுடன் இருந்துவரும் நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயுடன் பவன் கல்யாண் புகைப்படமும் இணைந்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது மீண்டும் கூட்டணியில் மாற்றமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
மதுரையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் பழைய விலங்கை உடைக்கிறேன், புதிய உலகம் படைக்கிறேன்; வேட்டையாடவே சாட்டை வாங்குவேன்; தாழ்வு நீங்கவே தலைமை தாங்குவேன்; சிதறிக் கிடக்கும் நெருப்பைச் சேர்த்து பழைய இருட்டை கொளுத்துவேன் என்ற வாசகங்களோடு தமிழக வெற்றிக் கழகம் வரிச்சியூர் முத்துகிருஷ்ணன் என்பவர் பெயரில் அச்சிடப்பட்டுள்ளது.








