மதுரை யானைமலை ஒத்தக்கடை பகுதியில் தனியார் அரங்கத்தில் மதுரை வாசகர் வட்டம் சார்பில் “இருநிலவுகள்” நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பரமசிவம் எழுதிய இரு நிலவுகள் இந்நூலினை அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் முனைவர் முத்துமணி வெளியிட கார்த்திகைசெல்வன் லோகநாயகி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். முனைவர் முத்துமணி நூலினை வெளியிட்டு சிறப்பு உரையாற்றினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக யானைமலை ஒத்தக்கடை ஊராட்சி மன்ற தலைவர்
முருகேஸ்வரி சரவணன் கலந்து கொண்டார். பின்னர் நூலின் பெருமைகளை வாழ்த்தி பேசினார். மேலும் இவ்விழாவில் முனைவர் அனார்கலி கவிஞர் சுந்தரபாண்டியன் சண்முகவேல் ராமமூர்த்தி மற்றும் வாசகர் வட்டநிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மதுரையில் வாசகர் வட்டம் சார்பில் “இருநிலவுகள்” நூல் வெளியீட்டு விழா
