• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

புலி நகத்தை கழுத்தில் அணிந்திருந்தவர்களிடம் விசாரணை

சத்தியமங்கலத்தை சேர்ந்த இருவர் புலிநகத்தை கழுத்தில் அணிந்திருந்தால் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் சென்னப்பன்,மாரியப்பன்-இருவரும் பழைய பட்டுப்புடவை வாங்கி அதில் உள்ள ஜரிகை எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர் இவர்களது கழுத்தில் புலி நகத்தை கயிற்றில் கட்டி அணிந்து இருந்தனர்.இதனை அறிந்த கோவை கிரைம் பிராஞ்ச் வனத்துறையினர் இருவரையும் பிடித்து விசாரனை செய்து சத்தியமங்கலம் வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகத்தில் வனத்துறையினர் விசாரனை மேற்கொண்டபோது சென்னப்பன், மாரியப்பன் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நாங்கள் பரம்பரையாக புலி நகம் அணியும் வழக்கம் உள்ளவர்கள் என கூறி முற்றுகை போராட்டம் நடத்தினர் இதனையடுத்து இருவரையும் வனத்துறையினர் விடுவித்தனர்.முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து சத்தியமங்கலம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.