• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ‘சாக்ஷம்’ செயலி அறிமுகம்

Byவிஷா

Mar 28, 2024

மக்களவைத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக ‘ஷாக்ஸம்’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம், கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு செயலிகள் மூலம் வாக்காளர்கள், வேட்பாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், ‘சாக்ஷம்’ செயலி மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்வதற்காக பிரத்யேகமாக தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல்முறை வாக்களிக்க உள்ள இளம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால், இதில் உள்ள பெயர், முகவரி, செல்போன் எண், மாநிலம், மாவட்டம், தொகுதி உள்ளிட்ட விவரங்கள் கிடைத்துவிடும். வாக்குப்பதிவு தினத்தன்று மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு தேவையான சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகளை இதன்மூலம் பெற முடியும்.
‘சுவிதா கேண்டிடேட்’ என்ற ஒரு செயலி வேட்பாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்வது, வேட்புமனுவின் நிலை குறித்து அறிந்து கொள்வது, பிரச்சாரத்துக்கான அனுமதி பெறுவது, அனுமதி விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்வது, அனுமதிக்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பெற்று பதிவு செய்தல் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த செயலி மூலம் வேட்பாளர்களின் நேரம் மிச்சமாவதுடன், சரியான விவரங்களையும் பெற முடியும்.