கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 10 மசோதாக்களை ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்ட ஆளுநர் ரவியை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. நிறுத்தி வைத்த மசோதாக்கள் பல்கலை தொடர்புடையது. நீதிமன்ற உத்திரவற்கு பின்பு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. மீண்டும் ஆளுநர் ரவி அடாவடியை மக்கள் மீது செலுத்த துவங்கி விட்டார்.
துணைவேந்தர் மாநாட்டை நடத்துகின்றார், இதற்கு துணை ஜனாதிபதியை அழைத்து இருக்கின்றார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், சட்டமன்ற சட்டங்களை மதிக்காமல், கல்வியில் முதலாவது மாநிலமாக விளங்கும் தமிழகத்தை பின்னுக்கு தள்ளும் முயற்சியினை ஆளுநர் ரவி தொடங்கி இருக்கின்றார்.
கல்லூரிகளில் பா.ஜ.க வின் முழக்கமான ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட செய்கின்றார். கல்வியை பின்னுக்கு தள்ளுவது என செயல்படுகின்றார். துணைவேந்தர் மாநாடுகளை கூட்டுவதற்கு அதிகாரம் இல்லை. எந்த மாநிலத்திலும் ஆளுநர்கள் இப்படி செயல்படுவதில்லை. ஆளுநர் ரவி மட்டும் அடாவடியாக செயல்படுகின்றார். கல்லூரிகளுக்குள் சென்று ஜெய் ஸ்ரீ ராம் என முழங்க செய்து காவி கூடமாக மாற்ற முயற்சிக்கின்றனர்.

சட்ட விரோதமாக கூட்டப்படும் மாநாட்டை கண்டித்தும், மத்திய அரசு ஆளுநர் பதவியில் இருந்து ரவியை நீக்க வேண்டும் என வலியுறுத்தி நாளை
காலை 11 மணிக்கு உதகை ஆளுநர் மாளிகையினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருக்கின்றோம்.
ஊட்டி பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்பட இருக்கின்றது. இதில் விடுதலை சிறுத்தைகள், ஆதிதமிழர் பேரவை, மக்கள் அதிகாரம், மே 17 உட்பட 20 க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்கின்றன என தபெதிக பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் பேட்டியில் தெரிவித்தார்.













; ?>)
; ?>)
; ?>)