புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ இரண்டாம் வீதியில் உள்ள தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதியின் இல்லத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்:

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு காரணம் ஈரான் – இஸ்ரேல் போர் மட்டும் காரணம் என்று சொல்வது சரியல்ல. இது முழுக்க முழுக்க என்.டி.ஏ அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வியால் ஏற்பட்டுள்ள விளைவு. என்.டி.ஏ அரசின் வெளியுறவுக் கொள்கையால் வந்த வினைதான் இந்த கேஸ் தட்டுப்பாடு.”
”அர்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கொண்டு வருவது மட்டும்தான் இப்போது சிக்கல். ஆனால் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு வருவதிலே எந்தவிதமான சிக்கலும் கிடையாது. ஆனால் அதற்குக்கூட அமெரிக்காவினுடைய அனுமதியை இந்திய அரசு இன்றைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுதான் நம்முடைய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டிருக்கிற, நம்முடைய இறையாண்மைக்கு கேள்விக்குறியாக உள்ள நிலை. ஆகவே இதற்கு முழுக்க முழுக்க என்.டி.ஏ அரசுதான் காரணம்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய அரசு ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த அழுத்தம் கொடுத்தார். அந்த அழுத்தத்திற்கு அடிபணிந்தது ஒரு அடிப்படை காரணம்.

இந்தியப் பொருட்கள் மீது கூடுதலாக 25% பீனல் டேரிஃப் வரி விதித்தார். அப்புறம் வரியைக் குறைத்துக் கொண்டார். கூடுதலாக விதித்த வரியைத்தான் குறைத்துக் கொண்டாரே தவிர, அதிலும் ஒரு 18% வரி விதித்தார். அதன் மூலமாக இந்தியப் பொருட்களை விற்கலாம் என்ற அனுமதியைத் தந்தார். அதை மோடி அரசு வெற்றி என்று கொண்டாடியது வெட்கக்கேடு.” ”ஆனால் அதே நேரத்தில், அமெரிக்காவினுடைய அனுமதியின்றி ரஷ்யாவிடமிருந்து நாம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்கா நமக்கு அனுமதி தரவில்லை. அதனால்தான் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறோம்.
பிப்ரவரி 2026-இல் இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைப்பதாக மோடி வாக்குறுதி கொடுத்துள்ளார். ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் ரோஸ்நேஃப்ட் மற்றும் லுகோயில் மீது அமெரிக்கா விதித்த தடை, இந்திய நிறுவனங்கள் அந்த எண்ணெயைக் கொண்டு வருவதிலே சிக்கலை ஏற்படுத்தியது.”
போர் மற்றும் கையிருப்பு குறித்த ஒப்பீடு எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு ஈரான் – இஸ்ரேல் போர் காரணம் என்றாலும், பதற்றம் திடீரென ஏற்பட்டது அல்ல.
கடந்த ஆண்டு ஜூன் 13 முதல் 24 வரை 12 நாட்கள் மோதல் நடந்தது. அப்போது எந்த தட்டுப்பாடும் ஏற்படவில்லை. ஒன்றிய அரசு முன்கூட்டியே கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போன்றவற்றை போதுமான அளவில் இறக்குமதி செய்து கையிருப்பு வைத்திருந்திருக்கலாம். ஆனால், இந்திய அரசு திட்டமிடவில்லை.
இந்தியாவில் இரண்டே இரண்டு குடோன்கள் தான் கேஸ் கையிருப்பு வைப்பதற்கு இருக்கிறது. அதை விரிவுபடுத்தவில்லை. ஆனால் சீனாவில் 200 நாட்களுக்குத் தேவையான எல்பிஜி கேஸ் கையிருப்பு வைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
மோடி அரசு குறைந்தபட்சம் 100 நாட்களுக்காவது திட்டம் தீட்டியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் பொதுமக்கள் இந்த அவதிக்கு உள்ளாகியிருக்க மாட்டார்கள்.
விலை ஏற்றம் மற்றும் லாப நோக்கம் “வணிக சிலிண்டரின் விலை மே 2014-இல் 1610 ரூபாய். ஆனால் இப்போது 2643 ரூபாய். வீட்டு உபயோக கேஸ் 2021-இல் 414 ரூபாய், தற்போது 928 ரூபாய்.” தற்போது கச்சா எண்ணெய் பேரல் 100 ரூபாய்க்கு விற்கிறது. ஆனால் 2008-இல் பேரல் 147 டாலருக்கு விற்றபோது கூட கேஸ் தட்டுப்பாடோ, பெட்ரோல் தட்டுப்பாடோ ஏற்படாமல் ஒன்றிய அரசு பார்த்துக் கொண்டது.
குஜராத் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையம் உலகிலேயே மிகப்பெரியது. அங்கு எவ்வளவு லட்சம் டன் வேண்டுமானாலும் சுத்திகரிப்பு செய்ய முடியும். ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பிறகு குறைந்த விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்கிய இந்தியா, பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கவில்லை.
மாறாக, அந்த குறைந்த விலை எண்ணெயை அம்பானி நிறுவனம் மூலமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபம் ஈட்டியது. இதன் மூலமாகவும் டீசல் மற்றும் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இறுதியாக, அமெரிக்காவைக் கண்டித்துப் பேசாதது இந்திய வெளியுறவுக் கொள்கையின் பலவீனத்தைக் காட்டுகிறது என்றும், இந்த தட்டுப்பாட்டிற்கு பாஜக அரசின் மோசமான வெளியுறவுக் கொள்கையே காரணம் என்றும்
மக்களின் நலன் கருதி, தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார், ஹோட்டல்கள் மற்றும் சிறு வணிகங்கள் எரிவாயு அடுப்பிலிருந்து மின்சார அடுப்பிற்கு மாற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மின்சார அடுப்பிற்கு மாறும் வணிகர்களுக்கு, கூடுதலாக செலவாகும் மின்சாரத்தில் ஒரு யூனிட்டிற்கு 2 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
எரிவாயுவிற்குப் பதில் மின்சாரத்தைப் பயன்படுத்தத் தேவையான இயந்திரங்களை வாங்க 1 கோடி ரூபாய் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும்.
இத்தகைய திட்டங்களை ஒன்றிய அரசு செய்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் செய்யாத நிலையில் தமிழ்நாடு அரசு முன்னோடியாகச் செயல்படுகிறது.
ஒன்றிய பட்டியலில் டீசல் மற்றும் பெட்ரோல் இருந்தாலும், அவற்றைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி மலரும் என்றும், மக்கள் மகிழ்ச்சியுடன் வைக்கப்படுவார்கள் என்றும் ஒன்றிய அரசின் தவறுகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தமிழ்நாடு மக்களை மாநில அரசு நிச்சயம் பாதுகாக்கும்.
எரிவாயு சிலிண்டர் பிரச்சனை வரவிருக்கும் தேர்தல்களில் என்.டி.ஏ (NDA) கூட்டணிக்கு எதிராகப் பிரதிபலிக்கும்.

ஒரே நாளில் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க ஒன்றிய அரசால் முடியும் ஆனால் அதை பாஜக அரசு முயற்சிக்க வில்லை, முயற்சிக்க தைரியமும் இல்லை.
எல்பிஜி சிலிண்டர் கையிருப்பு வைக்க எந்தவித ஏற்பாடுகளையும் மோடி அரசு செய்ய செய்யவில்லை, குறைந்தது 100 நாட்கள் கையிருப்பு வைப்பதை போல கட்டமைப்பு மோடி அரசு ஏற்படுத்தவில்லை.
கேஸ் தட்டுபாடு சிலிண்டர் தட்டுப்பாட்டை மோடியிடம் பேச எடப்பாடி பழனிச்சாமி க்கு தைரியம் இல்லை.
சிலிண்டர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு உணவகம் தேநீர் கடைக்கு மின்கட்டணத்தில் யூனிட்டுக்கு இரண்டு ரூபாயை தமிழ்நாடு அரசு குறைத்து அறிவித்துள்ளது இதை முன்னோடியாக எடுத்துக்கொண்டு மற்ற மாநிலங்களும் அறிவிக்க வேண்டும் என்ற தெரிவித்தார்.



