• Mon. Nov 3rd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

தேசியத் தலைவர் தேவர் பெருமகன் நடிகர் பஷீர் பேட்டி..,

ByKalamegam Viswanathan

Nov 2, 2025

தேசியத் தலைவர் தேவர் பெருமகன் படத்தின் நடிகர் பஷீர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா பசும்பொன் செல்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தனர். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் பஷீர் கூறுகையில்:

பலமுறை மதுரைக்கு வந்துள்ளேன். ஆனால் இம்முறை மதுரை மண்ணில் கால் வைக்கும் போது மீனாட்சி அம்மனின் அருள் கிடைத்ததாக உணர்கிறேன். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை தேசிய தலைவர் தேவர் பெருமகன் என்கிற படத்தில் நான் முத்துராமலிங்கத் தேவராக நடித்துள்ளேன். மதுரையில் ரசிகர்களுடன் அந்தப் படத்தை பார்க்க வந்து இறங்கியுள்ளேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் எனது நண்பர் சத்யா மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படம் விஜய் அஜித் படங்களை போன்று மாஸ் ஆன படம் இல்லை இது கோவிலுக்கு செல்வதைப் போல குடும்பம் குடும்பமாக சென்று பார்க்கிறார்கள். திரையில் அவர்கள் என்னைத் தேவராக பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. அய்யாவின் புகழை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது எனது ஆசை. நான் ஒரு இஸ்லாமியன் எனக்கு இந்த பிறவியில் தேவர் பெருமானின் வேடத்தில் நடித்துள்ளேன் என்றால் போன ஜென்மத்தில் அவர் வீட்டின் நாயாக நான் பிறந்திருப்பேன் அதனால் தான் எனக்கு இந்த பாக்கியம் கிடைத்துள்ளது. இந்த திரைப்படத்தை உலகம் முழுவதும் எடுத்து சென்று சேர்ப்போம் அதற்கு உங்களுக்கும் நன்றி.

தேவரை ஜாதிய தலைவராக்குவது குறித்த கேள்விக்கு:

அவரை தேசிய தலைவர் என்று சொல்வது தான் இந்த படம் இந்த படத்தில் எங்குமே அவரை ஜாதிய தலைவராக அடையாளப்படுத்தவில்லை. தேவரின் நிகழ்ச்சிக்கு தேவர்கள் அறிமுகப்படுத்திய மேடையில் அவர் பேசியது கிடையாது அந்த கருத்தைதான் இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளோம். அவர் தேசிய தலைவர் சாதிய தலைவர் அல்ல சாதிக்க பிறந்த தலைவர் என்பது தான் இந்த படம். ஜான்பாண்டியன் அண்ணன் இந்த படத்தை பார்த்துவிட்டு எனது இயக்குனரை பாராட்டி இருக்கிறார். இந்த படத்தை பார்த்துவிட்டு பெரிய அதிகாரிகள் முதல் அரசியல் பிரமுகர்களை வரை என்னை பாராட்டி இருக்கிறார்கள். இந்தப் படத்தில் நடித்தது ஆயிரம் படத்திற்காக நடித்தது போல் உள்ளது.

படத்திற்கு நடிக்க தயாராவது குறித்த கேள்விக்கு:

இந்த படத்தில் அய்யாவின் வேஷத்தை அணிந்தால் இறந்து விடுவேன் என்று சொன்னார்கள் தேவரின் வேஷம் போட்டால் இறந்து விடுவீர்கள் என்று சொன்னார்கள். அந்த வேஷம் போட்டால் இறந்து விடுவார்கள் என்று சொன்னார்கள். நான் அஜ்மீர் தர்காவை வணங்குபவன் அவரைப் போல் முத்துராமலிங்க தேவரும் ஒரு சித்தர் தான். இந்த படத்தில் நல்லபடியாக நடித்து முடிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன் இந்த ஒரு மாதமாக காப்பு கட்டி உள்ளேன் பசும்பொன் சென்று இப்போது கலட்ட போகிறேன் 100% அய்யாவின் பக்தராக மாறிவிட்டேன்.

திரையரங்குகள் குறித்த கேள்விக்கு:

சென்னை செங்கல்பட்டு பகுதிகளில் ஜாதிய படம் என்று சொல்வதால் திரையரங்குகள் கிடைக்கவில்லை இது தொடர்பாக தயாரிப்பாளர் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார் இது ஜாதக படம் இல்லை ஜாதி இல்லாத படம் என்ன சொல்லி இருக்கிறார் நிச்சயம் இது அனைத்து திரையரங்குகளிலும் வெற்றி அடையும்.

வெளியிடும்போது வந்த பிரச்சனைகள் குறித்த கேள்விக்கு:

தேவர் என்றாலே பிரச்சினை வரத்தான் செய்யும் எத்தனை தடைகள் வந்தாலும் அதனை தடைகளையும் உடைத்து எனது தயாரிப்பாளர் முத்துராமலிங்க தேவர் ஐயாவின் ஆசியுடன் உடைத்துக் கொண்டு வந்திருக்கிறோம்.

மிரட்டல் குறித்த கேள்விக்கு:

என் வீட்டிற்கு வந்து என்னை மிரட்டுகிறார்கள் அது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை அய்யா துணை எனக்கு இருக்கிறது நான் பார்த்துக் கொள்வேன். என் உயிர் உள்ளவரை அய்யா முத்துராமலிங்க தேவருக்கு நான் கடைசி தொண்டனாக இருக்க விரும்புகிறேன். மதுரையில் 25 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் ஆகியுள்ளது.

முக்கிய பிரமுகர்கள் பாராட்டு குறித்த கேள்விக்கு:

முன்னாள் முதல்வர்கள் இரண்டு பேர் பேசியிருக்கிறார்கள். துணை முதல்வர் பேசி பாராட்டி இருக்கிறார்கள் முன்னாள் முதல்வர் ஒருவர் இரண்டு முறை பேசி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் உலகநாயகனும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்பது எனது கோரிக்கை. அடுத்த படம் குறித்து எனது தயாரிப்பாளர் இடம் கேளுங்கள்.

தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் சத்தியா கூறுகையில்:

முத்துராமலிங்க தேவர் ஐயாவின் மறைக்கப்பட்ட வரலாறை மக்களிடம் சேர்க்கும் அருட்ப பணியை ஐயா எங்கள் நிறுவனத்திற்கு வழங்கியதற்கு அவருக்கு கோடான கோடி நன்றி. அய்யாவின் வாழ்க்கை வரலாறு அவருடன் பயணத்த தேசிய தலைவர்கள் மற்றும் அவர் ஆற்றிய மக்கள் துண்டுகள் எல்லாம் மொத்தமாக காட்டி இருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் உள்ளவர்களுக்கு குறிப்பாக சென்னை சுற்றி இருப்பவர்களுக்கு உத்திரவாளிங்க தேவர் ஐயாவை குறித்து விவரங்கள் தெரியாது ஆனால் இந்த படத்திற்குப் பிறகு அவரது சேவைகள் மற்றும் மறைக்கப்பட்ட வரலாறுகள் தெரிந்துள்ளது. நாங்கள் இந்த படத்தை பொருளாதார ரீதியாக எடுக்கவில்லை ஐயாவின் வரலாறை மக்களிடம் கொண்டு சேர்த்து அவரைப் பின்பற்றி அனைவரும் அனைத்து சமுதாயத்திற்கும் இருக்க வேண்டும் என்பதற்காக எடுத்தோம். அரசியல் சூழ்ச்சியால் அவர் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைக்கப்பட்டார். ஆனால் இந்த படம் வெளியான பிறகு மக்களுக்கு அனைத்தும் தெரிந்துவிட்டது. ராஜராஜ சோழனைப் போல் அய்யாவின் வரலாறும் இந்த படத்தின் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஓங்கும். அதிமுகவில் நான் ஒரு மாநில பதவியில் இருக்கிறேன். படத்தை எடுத்து வருமானத்திற்காக நான் விற்கணும் என்று நினைக்கவில்லை சொந்தமாக வெளியீடு செய்தோம். நாளை முதல் கூடுதலாக 100 திரையரங்குகளில் வெளியிடப் போகிறோம் ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஓடுகிறது. மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வெளியிடுவதற்கு பேசிக் கொண்டிருக்கிறோம் என கூறினார்.