கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
கரூர், வெண்ணைமலை கோயில் இனாம் நில பிரச்சனை உள்ளது. அறநிலையத்துறை இதுவரை 7 முறை சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்த விஷயத்தில் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. மக்கள் அந்த பகுதியில் 60 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.
உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக நேற்று வழக்கு வந்தது. திங்கட்கிழமையும் வருகிறது.

கடந்த வாரம் கரூரில் நடந்த செய்தியாளர் (செந்தில் பாலாஜி) சந்திப்பில் 420 என்று வார்த்தை வருகிறது. ஆள் கடத்தல், போலி மதுபானம், வேலை வாங்கி தருவதாக பணத்தை பெற்று ஏமாத்துவது, 3 செண்ட் இலவச நிலம் என்று போலி வாக்குறுதி,
வெள்ளி கொலுசு, ஆட்சிக்கு வந்தால் 11 மணிக்கு மாட்டு வண்டில மணல் அள்ளலாம் என வாக்குறுதி. 100 நாள்ல பட்டா வாங்கித்தருவேன் என வாக்குறுதி கொடுத்து ஏமாத்துவதுதான் “420”
தமிழ்நாடு முழுவதும் கோவில் இனாம் நில பிரச்சனை உள்ளது. ராதா கிருஷ்ணன் 2012ல் வழக்கு தொடர்ந்தார். 2019ல் தீர்ப்பு வந்தது. அதிமுக ஆட்சியின் போது நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கமிட்டி அமைக்க உத்தரவு வந்தது.

அப்போது அந்த கமிட்டி மூலமாக இனம் நிலங்களுக்கான விலை நிர்ணயம் செய்து உரிய முறையில் பட்டா வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால், இலவசமாக பட்டா வாங்கி கொடுப்பதாக சொல்லி மக்களை ஏமாற்றினார்கள்.
எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் மக்கள் பிரச்சனைக்கு சென்றால், வழக்கு தொடர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரை நான் இயக்குவதாக கூறுகிறார். அவரை நான் பார்த்தது கூட கிடையாது. அவரே எனக்கு யாரும் உதவவில்லை என கடுமையாக பேசி இருக்கிறார்.
4 1/2 ஆண்டுகளாக எங்கே போனார்கள்.
கரூரில் தவெக கூட்டத்தில் துயர சம்பவம் நடந்தது. 10 நிமிடத்தில் சமூக வலைதளங்களில் நேரலையில் (செந்தில் பாலாஜி) வந்தார்.
ஆனால், கரூரில் சமூக வலைதளங்களில் எங்களை பற்றி தகாத வார்த்தைகள் வருகிறது.
இனாம் கரூரில் 900 ஏக்கர் உள்ளது. 1967ல் இனாம் ஒழிப்பு சட்டம் மூலம் அரசு மக்களுக்கு பட்டா கொடுத்தனர். ஆனால், தற்போது பூஜ்ஜிய மதிப்பு கொண்டு வருகின்றனர். மக்கள் பாதிக்கப்படக்கூடாது.
அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் தவறு செய்ததாக குற்றம் சாட்டினர். இப்போது உங்க ஆட்சி நடக்கிறது. தவறை திருத்தி கொள்ள வேண்டியதுதானே, அரசு இதை சரியான முறையில் கையாள வேண்டும்.
தேர்தல் நேரத்தில் குழு போடுவதாக சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர். இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு வரவில்லை என்றால், சொந்த மண்ணில் மக்கள் அகதிகளாக மாறுவார்கள்.

மக்கள் தங்களது உரிமைகளை பேசுவதற்கு உரிமையியல் நீதிமன்றத்துக்கு செல்ல மக்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 13 லட்சம் ஏக்கர் உள்ளது. உழுதவனுக்கு நிலம் சொந்தம்.
நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம். ஆனால், தொகுதி மக்களுடன் நிற்க வேண்டும். இன்னும் 6 மாதம் உள்ளது. அதிமுக ஆட்சி வரும். இந்த பிரச்சனைக்கு நிச்சயமாக நிரந்தரவு தீர்வு கிடைக்கும்.








