• Sat. Feb 21st, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி…

ByK Kaliraj

Feb 21, 2026

சிவகாசி அருகே திருத்தங்கல்லில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பொதுமக்களுடன் அமர்ந்து திமுக விடியா ஆட்சியில் வீட்டு பில்லே சாட்சி என்ற நூதன பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுக ஆட்சியின் போது உள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை குறித்தும் திமுக ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலை குறித்தும் ஒப்பீடு செய்து அ திமுக ஆட்சியில் மக்களின் அன்றாட சதவீதம் உயர்ந்துள்ளதை பில் போட்டு கொடுத்து திண்ணை பிரச்சாரம் செய்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி,

தேமுதிக திமுகவிற்கு சென்ற பின்னர் தேமுதிகவின் கடந்த கால கொள்கை, விஜயகாந்தின் பேச்சுக்கள், பிரேமலதா, விஜயபிரபாகர் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் வலைதளங்களில் வந்து கொண்டிருக்கிறது, அந்த பேச்சுக்களை பார்க்கும்போது திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர்ந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தேமுதிக கூட்டணி கொள்கைக்கான கூட்டணி அல்ல கொள்ளையடிப்பதற்கான கூட்டணி.

அதிமுக தலைமையிலான கூட்டணி லட்சிய கூட்டணி

விடியா திமுக ஆட்சியால் மக்களுக்கு ஒன்றரை மடங்கு செலவீனம் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சி மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஆட்சிக்கு வருவதற்கான வேலையை செய்கிறது, அதற்காக பணியாகவே தேமுதிகவை கூட்டணிக்குள் திமுக வளைத்து போட்டுள்ளது.

எப்படி தேமுதிகவை திமுக வளைத்து என்ற வரலாறு சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை, ஒவ்வொரு தனி மனிதனும், ஒவ்வொரு குடும்பமும் திமுக ஆட்சியில் கஷ்டப்பட்டுள்ளார்கள், துன்பப்பட்டு துயரப்பட்டுள்ளார்கள்.

எதை சொல்லியும் மக்களை ஏமாற்ற முடியாது, கதையளக்கும் வேலையெல்லாம் இனிமேல் கதைக்கு ஆகாது.

அதிமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

வாக்காளர்கள் 100 பேரை சந்தித்தால் அதில் 90 பேர் திமுகவிற்கு எதிரான மனநிலையில் உள்ளனர். மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்பதெல்லாம் பகல் கனவு

அரசு அதிகாரிகள், காவல்துறையினர், தொழிலாளர்கள் என அனைவரும் திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு, நிதி நிலைமை மோசமானதுக்கு திமுகவின் நிர்வாக திறனற்றதே காரணம்.

திமுக அரசு திட்டமிட்டு பொய் சொல்லி கடன் வாங்கி அதில் லாபம் சம்பாதிக்கும் பணியை திமுக அரசு செய்திருக்கிறது.

இதுபோன்ற மோசமான ஆட்சியை தமிழக வரலாற்றில் கண்டதில்லை என மக்கள் பேசுகிறார்கள்

அதிமுக பாஜக கூட்டணி அற்புதமான கூட்டணி, மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட ஒரு ஆன்மீக கூட்டணி, தேசிய நலனில் அக்கறையுடன் நல்ல அரசு அமைய போராடக்கூடிவ நல்ல கூட்டணி

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததால் அத்தனை தேமுதிக நிர்வாகிகளும் நொறுங்கி அதிமுகவில் இணைந்து கொண்டிருக்கிறார்கள்

தேமுதிக எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்ற கொள்கையிலிருந்து நிலைமாறி இன்றைக்கு திமுகவுடன் சேர்ந்து அதற்கான காரணங்களை சொல்லி பார்க்கிறார், அந்த காரணங்களை தேமுதிக நிர்வாகிகளும், அடிமட்ட தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை

திமுக தேமுதிக கூட்டணியின் வெற்றி என்பது பூஜ்ஜியமாக முடியும் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என ஓபிஎஸ் கூறிய கருத்திற்கு பதிலளித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி,

திமுகவை எதிர்த்துதான் அதிமுக உருவாக்கப்பட்டது, ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை யார் எடுத்தாலும் அவர்கள் சுயநலவாதிகள் என தமிழக அரசியல் வரலாறு சொல்லும், சுயநலத்திற்காக அதிமுகவின் அரசையும் அதிமுக கட்சியையும் பிரயோகம் செய்து பேசக் கூடியவர்களுக்கு காலம் பதில் சொல்லும், தமிழக மக்கள் பதில் சொல்வார்கள்

தவெகவின் நிலைமை தற்போது பரிதாபமாக உள்ளது

தவெகவைப்பற்றி யாரும் கண்டுகொள்வது கிடையாது, களத்தில் அதிமுகதான், எங்களுக்கு எதிரி திமுக, இதுதான் கள நிலவரம்

அதிமுகவிற்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சி திமுகதான்,

எடப்பாடி பழனிச்சாமியிலான கூட்டணியும் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியும் களத்தில் நிற்கும்

தவெக என்பது பரிதாபத்திற்குரிய கட்சியாக இந்த தேர்தலோடு முடிந்து விடும்

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்த ராஜேந்திர பாலாஜி,

தனித்து நின்று 25 ஆயிரம் வாக்குகள் வாங்கியவர்களுக்கெல்லாம் அதிமுக பதில் சொல்ல முடியாது, அதிமுக தனித்து நின்றாலும் சிங்கம் சிங்கம்தான்

காங்கிரஸ் கட்சிக்கு என்ன இருக்கிறது? சும்மா வந்து வேடிக்கை காட்டிக்கொண்டு வேடிக்கை பொருளாகவே உள்ளார்கள்

திமுக அரசிற்கு உயர் நீதிமன்றம் மிகப்பெரிய குட்டு வைத்துள்ளது,

அமைச்சர் கே.என்.நேரும் மீது அமலாக்கத்துறை பலமுறை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது உயர்நீதிமன்றம் கையிலெடுத்து வழக்கு பதிவு செய்ய சொல்லியும் தமிழக அரசு இதுவரை வழக்குப்பதிவு செய்யாத்து வெட்கக்கேடான விஷயம்

நிரபராதி என உச்சநீதிமன்றம் செல்வோம் என சொல்லக்கூடியவர்கள் வழக்குப் பதிய மறுக்கிறார்கள், சம்பந்தமில்லாததற்கெல்லாம் தேடி தேடி வழக்கு போட்டவர்கள் உயர் நீதிமன்றம் சொல்லியும், உயர்ந்த ஸ்தாபனமான அமலாக்கத்துறை சொல்லியும் சொல்லியும் வழக்குப் பதிய மறுக்கிறார்கள்

திமுகவினரும், திமுக அமைச்சர்கள், எதை செய்தாலும் அதை தட்டிக்கேட்காமல் தட்டிக்கொடுக்கும் கட்சியாக திமுக தலைமை உள்ளது

திமுகவின் பல அமைச்சர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளது

தவெகாவிற்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருள்ராஜ் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,

மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு பெரிய கட்சியெல்லாம் இல்லை

அவன் (அருண்ராஜ்) கிடக்கிறான் லூசு பய,

திமுகவுக்கும், தவெகவிற்கு போட்டி என தவெகாவினர் லூசுத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்

இவர்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்,

பெரிய கட்சியை எதிர்த்து போராடுவது போல் காட்டிக்கொண்டால் தவெகவை மக்கள் மதித்துவிடுவார்களா?

தவெகவில் யார் இருக்கா அங்கு, ஒரு நாள் கூத்திற்கு தாங்குமா தவெக

ஒரே நாளில் இடத்தை காலி செய்து விட்டு ஓடி விடுவார்கள்

அதிமுக எவ்வளவு பெரிய பலம் கொண்ட கட்சி,

எம்ஜிஆர் ஜெயலலிதா உருவாக்கி எடப்பாடி பழனிச்சாமி கையில் அற்புதமாக இருக்கும் கட்சி அதிமுக

எடப்பாடி பழனிச்சாமியின் கரங்களில் இருக்கக்கூடிய அத்தனை அத்தனை பேரும் வீர வால்கள், போர் வால்கள்

அதிமுகவை எதிர்க்கின்ற துணிச்சல் திமுகவிற்கு மட்டுமே உள்ளது, வேறு கட்சிக்கு கிடையாது

தவெக களத்திலேயே கிடையாது என்றார்.