• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் பேட்டி..,

BySeenu

Dec 20, 2025

தனது தந்தையின் ரசிகர் குடும்பத்தின் பெண் குழந்தைக்கு விஜயலதா என நடிகர் சண்முக பாண்டியன் பெயர் வைத்தார்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள கொம்பு சீவி திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.அதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் அருகே உள்ள சாந்தி திரையரங்கில் படத்தைக் காண சண்முக பாண்டியன் மற்றும் படக்குழுவினர் வருகை தந்தனர்.சண்முக பாண்டியனை தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமாக ஜமாப் அடித்து, பட்டாசு வெடித்தும்,ஆராத்தி எடுத்தும் வரவேற்றனர்.

அதற்கு முன்னதாக ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் இசைக்கு ஏற்றவாறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக நடனமாடினர்.

செய்தியாளர்கள் சந்திப்பை தொடர்ந்து திரையரங்கில் தன்னைப் திரைப்படத்தை பார்க்க வந்த தனது தந்தையின் ரசிகர் குடும்பத்தின் பெண் குழந்தைக்கு விஜயலதா என பெயர் வைத்தார் நடிகர் சண்முக பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் சந்திப்பின்போது தொண்டர்களுக்கும் மற்றும் பொதுமக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சண்முக பாண்டியன்:-

கோவையின் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது அடுத்தடுத்த ஊர்களுக்கு படத்தின் பிரமோஷனுக்காக செல்ல இருக்கிறேன்.

அப்பா விஜயகாந்தின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை படுகிறேன் அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை ஈசியாக எடுக்க முடியாது எனவும் சரியான இயக்குநர் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் எனவும் அரசியல் இப்போதைக்கு நாட்டம் இல்லை இப்போதைக்கு சினிமாவில் தான் கவனம் செலுத்துவேன் என கூறினார்.

அப்பாவுடன் சரத் சார் நடித்துள்ளார் அவருடன் நடித்தது எனக்கு நல்ல அனுபவம் எனவும் அடுத்தடுத்த கதைகள் கேட்டு வருகிறேன் நல்ல கதைகள் புதிய இயக்குனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன்.படம் இப்போதைக்கு தயாரிக்கும் எண்ணம் இல்லை என்று இவ்வாறு தெரிவித்தார்.