• Tue. Feb 10th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

ஆங்கில வழி தகவல் தொடர்பு வெற்றியாளர் நிறுவனத்திற்கான நேர்காணல்..,

ByK Kaliraj

Feb 10, 2026

சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, பயிற்சி மற்றும் பணி அமர்வு மையத்தின் சார்பில் ஆங்கில வழி தகவல் தொடர்பு வெற்றியாளர் நிறுவனத்திற்கான (Winner Institute of Communicative English) நேர்காணல் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார்.

அவ்வுரையில், மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு நல்ல பணியில் அமர வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். அவர்தம் உரையில், குழு கலந்துடையாடலிலும் நேர்காணலிலும் மாணவர்கள் சிறந்த முறையில் பங்குபெற வேண்டும். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, நல்ல பணியில் அமர்ந்து, நேர்மையான வழியில் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதன்பின்பு ஆங்கில வழி தகவல் தொடர்பு வெற்றியாளர் நிறுவனத்தின் குழுத் தலைவர் மற்றும் மனிதவள நிர்வாகி அபிஷேக் ராதாகிருஷ்ணன், மற்றும்.பிரியங்கா, முதுநிலை மனிதவள அதிகாரி ஆகியோர் குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணலுக்கான வழிமுறைகளை எடுத்துரைத்து நேர்காணல் நடத்தினார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் அனைத்துத் துறைகளில் இருந்தும் 94 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 39 மாணவர்கள் பணி நியமன ஆணையினைப் பெற்றனர்.

நிகழ்வின் தொடக்கத்தில் பயிற்சி மற்றும் பணி அமர்வு மைய ஒருங்கிணைப்பாளர் .மகேசன் வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக, இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலத் துறை மாணவி .தீபலெட்சுமி நன்றியுரை வழங்கினார்.