• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இராஜபாளையம் பகுதியில் சர்வதேச யோகா தினம்!

ByRadhakrishnan Thangaraj

Jun 21, 2025

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் சர்வதேச‌ யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு நலப் பணித்திட்ட‌ மாணவிகள் யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக இராஜபாளையம் அறிவுத் திருக்கோவிலின் யோகா பேராசிரியை தனலட்சுமி கலந்து கொண்டு மாணவிகளுக்கு யோகப் பயிற்சி செய்வதால் உடலிற்கு ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்தார். பிரணாயாமம் பயிற்சி, சூரிய‌நமஸ்காரம் பயிற்சி வழங்கினார். கல்லூரி முதல்வர் லட்சுமி வாழ்த்துரை வழங்கினார். மாணவி கலைச்செல்வி வரவேற்புரை வழங்கினார். மாணவி தேவி நன்றியுரை கூறினார்.