கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் 11வது சர்வதேச யோகாதினக் கொண்டாட்டம் உலகப் பொது மறை திருக்குறள் வாசித்தலுடன் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்பிரம்மாண்ட விழாவில் 6000 பேர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்விக்குழும தாளாளர் S.மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர்.

பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்ரமணியன் தனது சிறப்புரையில் “அனைவருக்கும் பயனுள்ள யோகக் கலை இவ் உலகிற்கு நம் தாய்நாடு அளித்துள்ள ஈடு இணையற்ற கொடை ஆகும். யோகா மூலம் உலக ஒற்றுமையையும், நமது தாய்த் திருநாட்டின் பாரம்பரிய பெருமையை உலக அரங்கில் பிரதிபலிக்கும் வகையிலும் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் 6000 பேர் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்” என்று பெருமிதத்துடன் கூறினார்.
சர்வதேச யோகா தின கொண்டாட்ட ஏற்பாடுகளை கரூர் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்ரமணியன் தலைமையில் பரணி பார்க் முதல்வர் க.சேகர், பரணி வித்யாலயா முதல்வர் சு.சுதாதேவி, எம்.குமாரசாமி பி.எட் கல்லூரி முதல்வர் சாந்தி, யோகா ஆசிரியர்கள் ராணி, உமாமகேஸ்வரி மணிவண்ணன், வினோதினி, சிந்து ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.