• Mon. Mar 9th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டையில் 2நாட்களாக உலக மகளிர் தின கொண்டாட்டம்..,

Byமுகமதி

Mar 9, 2026

புதுக்கோட்டையில் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் சிலை அமைந்திருக்கும் வளாகத்தில் திலகவதியார் திருவருள் ஆதீனத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

திலகவதியார் திருவருள் ஆதீன சன்னிதானம் தவத்திரு சந்திர சேகர தயானந்த சுவாமிகள் ஆசியுடன் தொடங்கிய இவ்விழாவிற்கு தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா காலத்தில் அமைச்சராக இருந்த திருச்சி என்.நல்லுசாமி அவர்கள் தலைமையேற்றதுடன் புதுக்கோட்டையில் சாதனை புரிந்த பெண்களுக்கு சிறப்பு பரிசுகள் அளித்து கௌரவித்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் மருத்துவச் சேவை விருது டாக்டர் அனிதா தனசேகரன் அவர்களுக்கும் கல்விப் பணி செம்மல் விருது ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் கவிதா அவர்களுக்கும் எழுத்துச் செம்மல் விருது சங்கமித்திரை கணபதி அவர்களுக்கும் இளம் பேச்சாளர் விருது தீக்ஷா திரவியராஜ் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா.பிருந்தா அவர்கள் பேசுகையில்… பெண்கள் கடந்த காலத்தில் எப்படி எல்லாம் அடக்International Women’s Day celebrations in Pudukkottai for 2 days..

கி வைக்கப்பட்டார்கள் இப்போது எப்படி முன்னேறி வந்திருக்கிறார்கள் அதற்கான காரணங்கள் என்ன தான் எப்படி இந்த அளவுக்கு உயர்ந்த பதவிக்கு வர முடிந்தது என்பது குறித்து எல்லாம் விளக்கமாக பேசினார்.

மேலும் உலக மகளிர் தின விழாவிற்கான காரணம் என்ன நடந்தது எந்த காலகட்டத்தில் எதனால் உலக மகளிர் தின விழா கொண்டாடுவதற்கு தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்ற வரலாறு குறித்தும் அனைவருக்கும் பயனுள்ள வகையில் பேசினார்.

இன்னும் மாவட்டத்தில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் சிறு சிறு முன்னெடுப்புகளும் பெண்களுக்காக நடத்தப்பட்டது.