• Thu. Jan 23rd, 2025

பன்னாட்டு தமிழுறவு மன்றம் அனைத்து தமிழ் இயக்கங்களின் குமரி – சென்னை 32 வது ஆண்டு ஊர்திப்பயணம்.

உலக பண்பாட்டுத் தமிழுறவு மன்ற அமைப்பாளர் முனைவர். பெரும் கவிக்கோ. வா.மு.சேதுராமன் தலைமையில் தமிழ் நாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ். தமிழ் நாட்டில் தமிழுக்கு முதன்மை வேண்டி 12.02.1993_ம் ஆண்டு. கன்னியாகுமரி தேசப் பிதா காந்தி நினைவு மண்டபம் முன்பிருந்து, தமிழகத்தில் தமிழுக்கு முதன்மை வேண்டும் என்ற கோசத்துடன் கன்னாயாகுமரியில் இருந்து 50_நாட்கள், சென்னைக்கு நடைபயணம் மேற் கொண்ட குழுவினரை அன்று மேநாள் தமிழக மேல்சபை தலைவராக இருந்த சங்கரலிங்கம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ் நாட்டில் தமிழுக்கு முதன்மை வேண்டிய உரிமை பயணம்.1993_ல் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி திங்கள் 12_ம் நாள் தொடங்கி தொடர்ந்தது. முதல் பயணம் தொடங்கிய போது பெருங்கவிகோ.வா.மு. சேதுராமனுக்கு இப்போது அகவை 57.

தமிழுக்கு உரிமை வேண்டிய நடைபயணம் கடந்த 2020_ம் ஆண்டு முதல்
கன்னியாகுமரி சென்னை ஊர்தி பயணமாக மாற்றப்பட்டது. அதற்கு காரணம் தமிழ் உரிமை பயணக் குழுவில் இருந்த பெரும் பான்மையோர் அகவை 50 கடந்தவர்கள், நீண்ட தூரம் நடக்க முடியாத நிலையில் 50_நாட்கள் நடைபயணத்தை, 12_ நாட்கள் ஊர்திப்பயணமாக மாற்றப்பட்டு இன்று(பெப்ரவரி_12) 32 வந்து ஆண்டு பயணமாக கன்னியாகுமரியில் இருந்து தொடங்கியது. இன்று இதன் அமைப்பாளர் பெருங்கவிகோவிற்கு அகவை 89.

இன்று தொடங்கிய 32_து ஆண்டு பயணத்தை மதம் கடந்து, பாஜக மட்டுமே இல்லாத மற்ற அனைத்து கட்சிகளின் சார்பினரும். 32_வது ஆண்டு பயணக் குழுவினரை வாழ்த்தி வழியனுப்பினார்கள்.

ஊர்திப்பயணத்தை தமிழ் பணி செம்மல் வ. இளங்கோ கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் வா.மு.சே. திருவள்ளுவர், டாக்டர்.கீதா, வழக்கறிஞர் திருத்தமிழ்தேவனார், வரலாற்று ஆசிரியர் பை.சாகுல் ஹமீது, வழக்கறிஞர். சரவணன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் தாமஸ் ஆகியோர் பங்கேற்றனர்.