• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பூரி கடற்கரையில் சர்வதேச மணல் சிற்பக் கலை திருவிழா தொடக்கம்..!

Byவிஷா

Dec 2, 2023

சந்திரபாகா கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற கலாச்சார நிகழ்வான சர்வதேச மணல் சிற்பக் கலை திருவிழா ஒடிசாவின் பூரி கடற்கரையில் தொடங்கியுள்ளது.

இந்த விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையான மணல் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், கலாச்சாரம் முதல் சமூக பிரச்சினைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை பல்வேறு கருப்பொருள்களில் இந்த விழா நடைபெறுகிறது. 
கடற்கரையின் மணலைப் பயன்படுத்தி பல்வேறு சிற்பங்களை கலைஞர்கள் உருவாக்குகின்றனர். அவை பெரும்பாலும் செய்திகளை வெளிப்படுத்தும் சிற்பங்களாகவே இருக்கின்றன. இந்த விழாவானது சர்வதேச மணல் சிற்ப கலைஞர்களை கொண்டாடுவது மட்டுமல்லாமல் உள்ளூர் கைவினைஞர்களின் திறமைகளையும் ஊக்குவிக்கிறது.  இந்த விழாவின் நோக்கமாக சுற்றுலாவை மேம்படுத்துதல், மணல் சிற்பத்தின் செழுமையான கலைத்திறனைக் கொண்டாடுதல் மற்றும் கலைஞர்களுக்கு யோசனைகளை பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதை இந்த விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, ரஷ்யா, பெலாரஸ் மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கலைஞர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் சர்வதேச மணல் கலை விழா 2023 யில் பங்கேற்கிறார்கள்.
2011ஆம் ஆண்டு ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள சந்திரபாகா கடற்கரையில் முதல் சர்வதேச மணல் சிற்பக் கலை விழா தொடங்கப்பட்டது. இது ஆண்டுதோறும் டிசம்பர் 1 முதல் 5 வரை நடைபெறுகிறது.