• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை நகரி கல்வி நிறுவனத்துக்கு சர்வதேச அங்கீகார

ByKalamegam Viswanathan

Oct 18, 2024

பள்ளி படிப்பை முடிப்பதற்கு முன்னர் அமெரிக்க கல்லூரியின் இரண்டு ஆண்டு படிப்பை மதுரை நகரி கல்வி குழுமத்தில் பயில முடியும்.

மதுரை நகரியில் கல்வி இன்டர் கான்டினென்டல் பள்ளியின் சர்வதேச தர நிலையை ஆய்வு செய்த அமெரிக்காவின் ஏ.ஐ. ஏ.ஏ.எஸ்.சி- டபிள்யூ .ஏ.எஸ்.சி. எனப்படும் அமெரிக்கன் இன்டர் நேஷனல் அசோசியேசன், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான அங்கீகார நிறுவனம்ஆகும். இந்த சர்வ கல்வி அங்கீகார அமைப்பு மதுரை நகரி கல்வி நிறுவனத்துக்கு தனது அமைப்பின் சர்வதேச அங்கீகாரத்தை அளித்துள்ளது.

இந்த சர்வதேச கல்வி அங்கீகார நிறுவனத்தின் அங்கீகாரத்தை கல்வி குழுமம் பெற்ற நிலையில் இப்பள்ளியின் மாணவர்கள் சர்வதேச அளவில் பல்வேறு தொழில் வேலை வாய்ப்புகளை அளிக்கும் கல்வி படிக்கும் வாய்ப்பை பெறுவார்கள். அவர்கள் பள்ளி படிப்பை படித்து முடிக்கும் நிலையில் அமெரிக்க கல்லூரியின் இரண்டு ஆண்டுகள் படிக்கும் இரட்டை டிப்ளமோ வாய்ப்பை பெறுவார்கள்.

இது குறித்து கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்செந்தில் குமார் கூறுகையில்..,

மாணவர்கள் காலை முதல் மதியம் வரை பள்ளி பாடத்திட்டத்தையும் அதன் பிறகு மாலை வரை தொழில் கல்வி ஆராய்ச்சி மற்றும் இதர மேம்பாடு சார்ந்த விஷயங்களையும் பயில்வார்கள். இதனால் இங்கு பயிலும் மாணவர்களுக்கு உரிய நல்ல வேலை வாய்ப்பு அவர்கள் விரும்பிய துறைகளில் கிடைக்கும.

இந்த சர்வதேச அமைப்பின் அங்கீகாரத்தை பெற்றுள்ள நிலையில் எங்களது பள்ளி மாணவர்கள் 480 பாடத்திட்டங்களை பயில்வதற்கு வாய்ப்பு கிடைப்பதுடன் 12ம் வகுப்பு படித்து முடிக்கும் நிலையில் அமெரிக்காவில் உள்ள கல்லூரி படிப்பை இரண்டு ஆண்டுகளுக்கு படித்து முடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த இரட்டை டிப்ளமோ கல்வி திட்டத்திற்கு அமெரிக்காவில் தங்கி படிக்க அதிகம் செலவாகும். ஆனால் குறைந்த கட்டணத்தில் தமிழகத்தில் கல்வி பள்ளி நிறுவனத்தில் பயிலலாம். சிறந்த மாணவர்களுக்கு ஸ்பான்சர் நிதியுதவி அளித்தும் அவர்கள் மேற் கல்வி கற்க உதவுகிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உலக அளவில் புகழ்பெற்ற எங்களது கல்வி அங்கீகார அமைப்பின் கல்வி சார்ந்த படிப்புகளை மேற்கொள்ளும் தமிழகத்தின் இரண்டாவது கல்வி நிறுவனமாக நகரி கல்வி சர்வதேச இன்டர் காண்டினென்டல் பள்ளி உள்ளது என்று ஏ.ஐ. ஏ.ஏ.எஸ்.சி- டபிள்யூ .ஏ.எஸ்.சி. சர்வதேச கல்வி அங்கீகார அமைப்பின் இணை செயல் இயக்குனர் டாக்டர் மோகன லட்சுமி தெரிவித்தார்.

கல்வி குழுமத்தின் செயல்பாடுகள் தங்களை கவர்ந்துள்ளதாகவும் அவர்கள் மேற்கொள்ளும் முனைப்பு எங்களை மேலும் உற்சாகப்படுத்துகிறது. எங்கள் அமைப்பு இந்த கல்வி நிறுவனத்துடன் திறம்பட இணைந்து பள்ளியின் மாணவர்கள் பல்வேறு தொழில் சார்ந்த துறைகளில் நிபுணத்துவம் பெறவும் வழிகாட்டுவோம் என ஏ.ஐ. ஏ.ஏ.எஸ்.சி- டபிள்யூ .ஏ.எஸ்.சி.யின் தலைவர் டாக்டர் பேரி ஆர்.குரோவ்ஸ், சர்வதேச கூட்டாண்மை இயக்குனர் எட்மென்டம், செயல் இயக்குனர் கிறிஸ்டோபர் சான் ஆகியோர் தெரிவித்தனர்.