மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வணிக பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவின் சர்வதேச மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டாக்டர்.அப்துல் கலாம் கலையரங்கில், இந்திய செயல்பாட்டு ஆராய்ச்சி சங்கம், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் மேலாண்மை ஆய்வுகள் துறை, இந்திய பகுப்பாய்வு சங்கம் மற்றும் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை ஆகியவை இணைந்து நடத்திய வணிக பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவு 12 வது சர்வதேச மாநாடு 3 நாட்கள் நடைபெற்றது.
இதில் செயல்பாட்டு ஆராய்ச்சி, பொருளாதார அளவியல், வணிக பகுப்பாய்வு, மற்றும் வணிக நுண்ணறிவு ஆகியவற்றின் தற்போதைய பயன்பாடுகள் குறித்து தொழில்துறை மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விவாதித்தனர். இந்த மாநாட்டை முனைவர் எம். மதிராஜன் தலைமையேற்று துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மதுரை காமராஜ் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, கென்யா, ஐ.ஐ.எம், ஐ.ஐ.டி மற்றும் மாநில பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.இவை அறிஞர்களால் ஆய்வு செய்து விவாதிக்கப்பட்டன.இதன் பின்னர் சிறந்த ஆய்வறிக்கை அளித்தவர்களுக்கு ரொக்கப் பரிசுகளுடன், மாணவர்கள், கல்வியாளர் மற்றும் தொழிலதிபருக்கான சிறந்த ஆய்வறிக்கை விருதுகளும் வழங்கி பாராட்டினர்.இம்மாநாட்டில் பல்வேறு நாட்டு அறிவியலாளராகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.




