• Mon. Apr 29th, 2024

கோவையில் சர்வதேச அளவிலான கேஸ்ட்ரோ எண்டிராலஜிஸ்ட் எனும் இரைப்பை மற்றும் குடல் நிபுணர்களின் மாநாடு…

BySeenu

Nov 5, 2023

உலக அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை சார்ந்த மருத்துவவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு..,
கோவையில் சர்வதேச அளவிலான கேஸ்ட்ரோ மருத்துவர்கள் மாநாடு நடைபெற்றது. விஜிஎம் மருத்துவமனை மற்றும் விஜிஎம் அறக்கட்டளை சார்பாக “கேஸ்ட்ரோ அப்டேட் 2023” தலைப்பில் நடந்த இந்த மருத்துவர்கள் மாநாட்டை, இந்திய யூனியன் மினிஸ்டர் எல். முருகன் ஆரம்பித்து வைத்தார்.

அமெரிக்கா , சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து உலகளவிலிருந்து மருத்துவர்கள் இந்த கேஸ்ட்ரோ மாநாட்டிலெ பங்குபெற்றனர். இந்த மாநாட்டில் கேஸ்ட்ரோ தொடர்பான மருத்துவர்களின் பேருரைகள், விவாதங்கள், மருத்துவ சிகிச்சையில் உலகில் அதி நவீன வழிமுறைகள் போன்றவற்றை விவாதிக்கப்பட்டன. இந்தியா முழுவதும் இருந்து கேஸ்ட்ரோ பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர். சர்வதேச மருத்துவர்கள் புதிய கருவிகள் , செயல் விளக்கங்கள் பற்றிய விரிவுரை மற்றும் விளக்க முறை நடத்துகின்றனர். இந்த மாநாட்டில் இரண்டு பகுதிகளாக கேஸ்ட்ரோ மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்குத் தேவையான செரிமான கோளாறுகள் விவாதித்தனர். இந்த மாநாட்டில் தலை சிறந்த மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *