• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மதுரை பாஜகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல் : அதிருப்தியில் நிர்வாகிகள்

மதுரை மாநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் நியமனத்தில் மாவட்டத் தலைவர் மீது பழைய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் டாக்டர் சரவணன். சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட அக்கட்சியில் வாய்ப்பு கிடைக்காததால் பாஜகவில் சேர்ந்தார். மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட்டார். 2 மாதங்களுக்கு முன்பு மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக சரவணன் நியமிக்கப்பட்டார்.

தற்போது மதுரை மாநகர் பாஜகவுக்குப் புதிய நிர்வாகிகளாக தனக்கு ஆதரவான கட்சியினரை சரவணன் நியமனம் செய்து வருகிறார்.

ஜன. 2-ல் தொடங்கி ஜன.22 வரை கட்சிக்கும், கட்சியின் பல்வேறு அணிகளுக்கும் 160-க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகளை அவர் நியமித்துள்ளார். இதில் ஏற்கெனவே நிர்வாகிகளாக இருப்பவர்கள் நீக்கப்பட்டதாக அறிவிப்பு இல்லை.

இதனால் ஏற்கெனவே நிர்வாகிகளாக இருப்பவர்கள், தாங்கள் பதவியில் இருக்கிறோமா, இல்லையா என்கிற குழப்பத்தில் உள்ளனர்.