விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கள்ளச்சாராயம் ஊரல் போட்டு மான் வேட்டையாடுவதாக இராஜபாளையம் வனச்சரகர் சரண்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் வனச்சரகர் சரண்யா உத்தரவின் பேரில் வனவர்கள் கனகராஜ். விக்னேஸ்வரன் தலைமையில் 15க்கு மேற்பட்ட வனத்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சூரிய நல்லி எஸ்டேட் பகுதியில் சோதனை செய்த பொழுது 5 லிட்டர் கலாச்சாரை ஊரல் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அதன் அருகே இருந்த கடற்கரை என்பவரை பிடித்து விசாரணை செய்த பொழுது எஸ்டேட்டில் பணிபுரிவதாகவும் மது போதைக்காக கள்ளச்சாராயர் ஊரல் போட்டதை ஒப்புக்கொண்டு உள்ளார்.
மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பொழுது சில சமயங்களில் மான் வேட்டையாடி மாமிசத்தை சமைத்து சாப்பிட்டதாகவும் கூறியுள்ளனர். வனத்துறை சோதனையின் போது அவர்களிடம் 5 லிட்டர் கள்ளச்சாரை ஊரளும் இரண்டு நாட்டு துப்பாக்கியும் இருந்துள்ளது. இதை பறிமுதல் செய்த வனவர்கள் கனகராஜ் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் சேத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ரமேஷ் கண்ணனிடம் ஒப்படைத்துள்ளனர் .
கள்ளச்சாராயம் ஊறல் போட்டதன் அடிப்படையில் தெற்கு தேவதானம் தெற்கு தெருவை சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் கடற்கரை வயது 56 என்பவரை மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் .
மேலும் இவர்களுடன் இருந்த சிவகிரி கட்டபொம்மன் தெரு சேர்ந்த கடற்கரை மகன் சண்முகராஜ் வயது 40. . அதேபோல் சண்முகராஜ் மகன் தங்கப்பாண்டி வயது 17 இவர்கள் சிவகிரியை சேர்ந்தவர்கள் .மேலும், தெற்கு தேவதானம் தெற்கு தெருவை சேர்ந்த கடற்கரை மகன் செல்வகுமார் வயது 23 தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா ஆனைமலையான் பட்டியை சேர்ந்த வல்லநாயக்கர் மகன் ஊமத்துறை வயது 55 என்பவர்களை கைது செய்தனர்.

இவர்களுடன் தொடர்பில் இருந்த தப்பி ஓடிய சிவகிரி மருதகிழவன் கோவில் தெருவை சேர்ந்த பிள்ளையார் தேவர் மகன் மாரியப்பன் வயது 57 என்பவரை போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தினர் மேலும் இவர்களுடன் கூட்டாளியாக இருந்த இராஜபாளையம் திருவள்ளூர் தெருவை சேர்ந்த பொன் இளங்கோ மகன் வேங்கை தலைமறைவாக உள்ளார் இவரை சேத்தூர் காவல் நிலை போலீசார் தேடி வருகின்றனர்.