• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

இன்று தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு…21 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல்…

Byகாயத்ரி

Jul 4, 2022

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் அவ்வப்போது முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய், அபுதாபி சென்று 6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்தார்.

இந்த நிலையில் தமிழக அரசு இன்று தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறது. சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும், 70 ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடுகள் கிடைக்கும் என்றும் தொழில் துறை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் என்றும், இது தவிர 12 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.