சுதந்திர இந்தியாவின் 77_வது குடியரசு தினம். குமரி முதல்_ காஷ்மீர் வரையில் கொண்டாட்டம் பாதையில். குமரி மாவட்டத்தில். நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடலில். குமரி ஆட்சியர் அழகு மீனா. இந்தியாவின் மூன்று வண்ண தேசிய கொடியை இயற்றிவைத்தார். இந்த நிகழ்வில் குமரி மாவட்ட காவல்துறையின் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின், குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், தமிழக அரசின் வணிக கழகத்தின் தலைவர் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜான், அரசின் அனைத்துத்துறை யின் அதிகாரிகள், மாணவர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட ஆட்சியர் அழகு மீனா காவல்துறை அணிவகுப்பு மரியாதைக்கு பின் காவல்துறையின் அணிவகுப்பை பார்வையிட்டார். இந்த நிகழ்வில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் உடன் பயணித்தார்.

பல்வேறு துறைகளில்,அவர்களின் சாதனையை பாராட்டி(காவல்துறை உட்பட) ஆட்சியர் அழகு மீனா சான்றிதழ் வழங்கினார். சமுகத்தில் நலிந்த பிரிவினரது குடும்பங்களுக்கு நிதி உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
பள்ளி மாணவர்களின் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.






