• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

துருக்கி நிலநடுக்கத்தில் இந்திய இளைஞர் பலி

ByA.Tamilselvan

Feb 12, 2023

துருக்கி நிலநடுக்கத்தில் இந்திய இளைஞர் காணவில்லை என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில்பணி நிமித்தமாக சென்றவர் நிலநடுக்கத்தில் பலியானர் என தெரிவந்துள்ளது.
உத்தரக்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் குமார் என்ற 36 வயது இளைஞர் பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நிறுவனத்தின் சார்பில் வேலை நிமித்தமாக ஜனவரி 22ஆம் தேதி துருக்கி சென்றுள்ளார்.அங்கிருந்த மலாட்யா என்ற பகுதியில் உள்ள ஹோட்டலில் இவர் தங்கியிருந்த நிலையில், பிப்ரவரி 6 நிலநடுக்கத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இவர் உடலில் உள்ள ‘ஓம்’ என்ற டாட்டூவை மயாமான நபர் இவர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.