• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவையில் சுதந்திர தினவிழா- இறுதிகட்ட ஒத்திகைகள் தீவிரம்…

BySeenu

Aug 12, 2024

வருகின்ற 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினவிழாவில் வாஹா எல்லையில் இந்திய இராணுவத்தினர் அணிவகுப்பும் அதே இடத்தில் நடைபெறும். பாகிஸ்தான் நாட்டு இராணுவத்தினரின் அணிவகுப்பும் நடைபெறும் ஒரு சேர பார்க்கும் போது உணர்ச்சி பூர்வமிக்க நிகழ்ச்சியாகவும் இருக்கும்.

அந்த அணிவகுப்பை போலவே கோவையிலும் இம்முறை நடத்த ஆயுதப்படை போலிசார் முடிவு செய்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கோவை வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தின விழாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதன்முறையாக வாஹா எல்லையில் நடைபெறும் அணிவகுப்பை போலவே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இறுதி கட்ட ஒத்திகைகளில் கோவை மாநகர ஆயுதப்படை போலிசார் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாஹா எல்லையில் பயிற்சி பெற்ற கமாண்டோ அதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

15ம் தேதி பொதுமக்கள் கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தால் இதனை காணலாம்.

அதே போன்று சுதந்திர தினவிழாவின் காவல் அணிவகுப்பு ஒத்திகைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.