மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் நாட்டின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது செயல் அலுவலர் இளமதி கலந்து கொண்டு பொது விருந்தினை தொடங்கி வைத்தார் பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா சுபா உள்பட பலர் கலந்து கொண்டனர் சிறப்பு வழிபாட்டில் அர்ச்சகர் சண்முகம் பூஜைகள் செய்தார்.

இதே போல் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு கூட்டு வழிபாடு மற்றும் பொது விருந்து நடந்தது. இவ்விழாவிற்கு கோவில் செயல் அலுவலர் கார்த்திகைசெல்வி தலைமை தாங்கினார். தக்கார் மாலதி முன்னிலை வகித்தார்.சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் நாராயணன் பட்டர் சிறப்பு பூஜை செய்து பிரசாதம் வழங்கினார். குரு பகவான் சன்னதியில் ஸ்ரீ பாலாஜி பூஜை செய்து பிரசாதம் வழங்கினார்.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பசும்பொன்மாறன் பொது விருந்தினை தொடங்கி வைத்தார். இதில் கிராமநிர்வாக அலுவலர் வெங்கடேசன்,மாவட்ட இளைஞரணி வெற்றிச்செல்வன், மகளிர்அணி லிங்கராணி, ஊராட்சி செயலாளர் மனோபாரதி, கோவில் பணியாளர்கள் நாகராஜன், மணி, நித்தியா, பிரகாஷ், ஜனார்த்தன் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.