சோழவந்தான் பேரூராட்சியில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசின் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சுகாதாரப் பணி ஆய்வாளர் முருகானந்தம் வார்டு கவுன்சிலர்கள் வக்கீல் சத்திய பிரகாஷ், ஈஸ்வரி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். துணைத்தலைவர் லதாகண்ணன் இனிப்பு வழங்கினார். வார்டு உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.








