• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சென்னையில் அதிகரித்து வரும் குட்கா விற்பனை.., தடுப்பதற்கு புதிய சட்டம் விரைவில்..!

Byவிஷா

Feb 1, 2023

சென்னையில் அதிகரித்து வரும் குட்கா விற்பனையைத் தடுப்பதற்கு புதிய சட்டம் விரைவில் வரவிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு குட்கா விற்பனை தடை செய்யப்பட்டது. பின்னர் ஆண்டுதோறும் இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தடையை மீறி விற்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சென்னையில் கடைகளில் குட்கா மற்றும் புகையிலை விற்பனை அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக புதிய சட்டம் விரைவில் வரவிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இது குறித்து அவர் கூறியுள்ள செய்திக்குறிப்பில்..,
குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பொதுமக்களின் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. எனவே கடை வியாபாரிகள் இந்த பொருட்கள் விற்பனையை தவிர்க்க வேண்டும். குட்கா விற்பனையை தடுக்க தேவைப்பட்டால் கூடுதல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றார்.