• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உ.பி.யில் அதிகரிக்கும் மதம் சார்ந்த நடவடிக்கைகள்

உத்தரபிரதேசத்தின் பள்ளி மாணவர்கள் இந்து ராஜ்ஜியத்தின் பேரில் உறுதிமொழி எடுத்த வீடியோசமூகவலைதளங்களில் வைரலாகிறது.


இதுபோன்ற மதவாத நடவடிக்கைகள் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலால் அதிகரித்து வருவதாகக் கருதப்படுகிறது.


பாஜக ஆளும் உ.பி.யின் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.
இதில், பாஜக ஆட்சி தொடரவேண்டி இந்துத்துவா அமைப்புகள் பல முயற்சித்து வருகின்றன. இதற்காக அவர்களில் சிலர் மதவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிகரிப்பது தெரிகிறது. உ.பி.யின்சோன்பத்ராவிலுள்ள விமலா இண்டர் காலேஜ் எனும் தனியார் பள்ளியின் சில பிளஸ்-டூ மாணவர்கள், இந்து ராஜ்ஜியத்தின் பேரில் கடந்த 28-ம் தேதி உறுதிமொழி எடுத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ பதிவை அம்மாவட்ட இந்தி செய்தி சேனலின் ட்விட்டர் பதிவில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இந்த வீடியோவில் ‘இந்து ராஜ்ஜியம் அமைக்கப் போராடு, எதிர்ப்பவர்களை கொல்ல உயிரையும் தியாகம் செய்’ என அந்த மாணவர்கள் உறுதிமொழி ஏற்கின்றனர்.


உ.பி. சட்டப்பேரவை தேர்தலின் பிரச்சாரமாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் பெயர்களை குறிப்பிட்டு ஆதரவுப் பேச்சுக்களும் அதில் இடம் பெற்றுள்ளன. மதவாதம் பரப்பும் வகையிலான இந்த நடவடிக்கை மீது சோன்பத்ரா போலீஸார் இதுவரை எந்த வழக்குகளும் பதிவு செய்யவில்லை.


இது குறித்து சோன்பத்ரா மாவட்ட போலீஸார் கூறும்போது, ‘இதுதொடர்பான எங்கள் விசாரணையில் நடவடிக்கைக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டுள்ளோம். இதன் தாக்கமாக எங்கும் கலவரம் இல்லை. இந்தசம்பவத்தில் எவரும் புகார் தராததால் வழக்குகள் பதிவாகவில்லை’ எனத் தெரிவித்தனர்.